கள்ளக்குறிச்சியில் வாலிபர் சங்கம் போராட்டம்
1 hour before
<p><strong>கள்ளக்குறிச்சியில் வாலிபர் சங்கம் போராட்டம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, அக்.16-தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராடிய மாணவர்களையும்இளை ஞர்களையும் டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவத்தை கொண்டு அராஜக முறையில் கைதுசெய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று போராட்டம்நடைபெற்றது.</p><p>கள்ளக்குறிச்சி இந்தி யன் வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்ட த்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கா.சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தின் போதுகள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட் டோரைகாவல்துறையினர் கைது செய்தனர்.இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஆறு.பகத்சிங், இந்தியமாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பிரகாஷ்காரத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொ.தீபன்ராஜ்,மாவட்டக்குழு உறுப்பினர் கள் முனு.சரத்குமார், டி.ராஜீவ்காந்தி, ப.சின்ன ராசு, ஆ.ரிச்சர்ட் பிரபு உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.</p>
