தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்

5 Aug 2026, 9:21 pm
கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்

கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு முடிவு

வேளாங்கண்ணி, ஆக. 5 -சமூகநீதி, கல்வி உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும்கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட், செப்டம்பரில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீட் தேர்வு விலக்கு,தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு, அரசுத்துறை காலிப்பணியிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்துவிவாதிக்கப்பட்டுப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வுக்கு முழுமையான விலக்கு கோரி தொடர் இயக்கங்கள்

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்படும் நீட்(NEET) தேர்வு, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமமான கல்வி வாய்ப்புகளுக்கு எதிரானதாகத்தொடர்வதாகக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கிராமப்புறம், அரசுப் பள்ளி மற்றும் ஏழை, எளியகுடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, தேர்வு முறையில் தொடர்ந்துவெளிவரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் தொடர் எழுச்சியின் விளைவாகவே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகநேரிட்டது என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு நீட் போராட்டத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்துள்ளதை வாலிபர் சங்கம்வரவேற்கிறது. அதே நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், நீட் எதிர்ப்புப் போராளி அனிதா நினைவு நாளான செப்டம்பர்1 அன்று தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் “இனி ஒரு உயிரை இழக்க மாட்டோம்” என்ற தலைப்பில்பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும், மாலையில் திறந்தவெளி கருத்தரங்குகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவுஒன்றிய பாஜக அரசின் தாராளமய, தனியார்மய மற்றும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. வேலையின்மை பெருக்கமும், நிரந்தர வேலைவாய்ப்புகள் அழிக்கப்பட்டு அவுட்சோர்சிங் முறைகள் அதிகரிக்கப்படுவதும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதைக் கண்டித்து, நாடுமுழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் கோரி ஆகஸ்ட் 10 அன்றுநடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைக்கான நடைபயணம்

தேனி மாவட்டம், கடமலைகுண்டு –மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டியூர் உள்ளிட்ட 50-க்கும்மேற்பட்ட மலை கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் எளிய உழைக்கும் மக்களை“ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வணிக ஆக்கிரமிப்புகளுக்கும் தலைமுறை தலைமுறையாக வாழும் எளியமக்களின் குடியிருப்புகளுக்கும் இடையில் வித்தியாசம் காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டின் வனஉரிமைச் சட்டத்தின்படி மலைவாழ் மக்களுக்கு நில மற்றும் பாரம்பரிய உரிமைகளை முழுமையாக வழங்கவேண்டும் என்றும், இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபயண இயக்கம்நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

செவிலியர் காலிப்பணியிடங்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதாரத்துறையில் மறுசீரமைப்பு என்ற பெயரில்மேற்கொள்ளப்படும் செவிலியர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது. புதிய செவிலியர் கல்லூரிகளில் ஒப்பந்த முறையில்ஆசிரியர் பணியமர்த்துவதைத் தவிர்த்து, நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் புயல் மற்றும் வெள்ளச் சூழல்களில் இரவுபகலாகப் பணியாற்றிவரும் 12,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்; அரசுத் தேர்வு முறைகள்

தூத்துக்குடியில் உப்பளங்களை அழித்துஅமைக்கப்பட உள்ள கப்பல் கட்டும் தளத்தால் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரிசு நிலத்தில் மாற்று இடத்தைத்தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. மேலும், சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II) மற்றும்சீருடைப் பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து, வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்வு முறையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், கரூர் துயரச் சம்பவத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு ஏற்று பாதிக்கப்பட்ட குடும்பங்பளுக்குச் சட்டப்பூர்வமான மறுவாழ்வு மற்றும் மாற்று உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

காவல் மரணங்களுக்கு கண்டனம்; சேலம் குடிநீர் விவகாரம்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் காவல் மரணங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுத்துநிறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை வெளிநாட்டுத் தனியாரான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும், ஜவ்வாது மலையில்அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத்திட்டத்தைக் கைவிடக் கோரி வேலூரில் மக்கள்சந்திப்பு நடைபயணம் நடத்துவது என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், பொருளாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.