தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

11 Aug 2026, 9:14 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

எபோலா வைரஸ் : 2,000 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களாக காங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை2,000-ஐத் தாண்டியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும்1,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் மிகக் கடுமையானவேகத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. நாட்டின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் வரலாற்றிலேயே தற்போது தான் எபோலாமிக வேகமாகப் பரவி வருகின்றது. இதே நேரத்தில் எபோலா பரவல் கட்டுப்பாடு, சிகிச்சைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றகுற்றச்சாட்டும் உள்ளது.

50 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

சோமாலியா அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளில் 50சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் மிகக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நாநிவாரண அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்தராமல் வெட்டியது மற்றும் வறட்சி காரணமாக இந்த நிலைமை மேலும்மோசமடைந்துள்ளது என ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு எச்சரித்துள்ளது. நீண்டகாலமாகவே வறுமை,பஞ்சம், உள்நாட்டு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள சோமாலியா, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வறட்சியைச் சந்தித்துவருகிறது. இதனால் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் கடுமையான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி

ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவிடமிருந்து ரஷ்யா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெற்றுள்ளதாகக் உக்ரைன் கூறி வந்தது. மேலும் ரஷ்யாவின் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொது மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி 13 பேரை உக்ரைன் படுகொலை செய்தது. இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சமீப வாரங்களாக உக்ரைன் மீதான பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் நிலத்தை தாரை வார்க்க சட்டம்

பியூனஸ் அயர்ஸ்,ஆக.11-அர்ஜெண்டினா மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேறிவிட்டு மிக எளிதான முறையில் அந்நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குகொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களின் தீவிரமான போராட்டத்தின் காரணமாக அச்சட்டத்தில் சில சரத்துக்கள் மட்டும் திரும்பப்பெற வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முதலாளித்துவ பாதையில் செல்லும் நாடுகள் குறிப்பாக நவீனதாராளமயக்கொள்கைகளை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களை தாரை வார்த்துவருகின்றன.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின்ஜனாதிபதி ஜேவியர் மிலெய் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். அமெரிக்காவின் அடிவருடியாகவும் அந்நாட்டின் ஆதரவுடனும் ஆட்சிக்கு வந்த அவர் தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நவீனதாராளமய பொருளாதார கொள்கைகளை தீவிரப்படுத்துகிறார். அதன் ஒரு பகுதியாக புதிய நிலசீர்திருத்தமசோதா ஒன்றையும் அறிமுகம் செய்திருந்தார். அந்த மசோதாப்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதம் வரை வெளிநாட்டினர் வாங்கும் வகையில் வரம்பை உயர்த்துவது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த அரசுக்கு உள்ள அதிகாரஉரிமையை நீக்குவது. வாடகை பாக்கி வைத்துள்ளவர்களை எளிதாக வெளியேற்றுவது போன்ற சரத்துகள் இடம்பெற்றிருந்தன. நாட்டின் நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதுதான் இந்த சட்ட மசோதாவின் அப்பட்டமான நோக்கம் என தெரிந்தது. இந்நிலையில் தான் இந்த சட்டத்திற்கு எதிராகஆகஸ்ட் 6 அன்று அர்ஜெண்டினா மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் தெருவுக்கு வந்து மிகத்தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். நாடாளுமன்றம் கூடிய நேரத்தில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர்,சமூக இயக்கங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திரண்டு பிரம்மாண்டபோராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல என்ற போராட்ட கோஷங்கள் நாடு முழுவதும்எதிரொலித்தன.

போராட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.பத்திரிகையாளர்கள் மீதும் கடும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.நாடெங்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மிரண்டு போன அரசு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 25சதவீதம் வரை வெளிநாட்டினர் வாங்கும் வகையில் வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட சில சரத்துக்களை மட்டும்நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

வாடகை பாக்கி வைத்துள்ளவர்களை எளிதாகவெளியேற்றுவது தொடர்பான பிரிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அர்ஜெண்டினாவில் ஏற்கெனவே தீவிர பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அர்ஜெண்டினாவில் வாடகைக்குக் குடியிருக்கும் குடும்பங்களில் 57 சதவீதத்தினர் தங்கள் வருமானத்தில் இருந்து 50 சதவீதத்துக்கும் அதிகமான பணத்தை வாடகைக்கே செலவிடுகின்றனர். இந்த நெருக்கடிஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இச்சட்டம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைவீடற்ற நிலைக்குத் தள்ளும் என கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும், கார்ப்பரேட்டுகளின் நிலங்களை அரசுடமையாக்குவதைக் கடினமாக்கும் புதிய விதிகளும்நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை “பொதுநலன்” என்ற பெயரில் நிலங்களைக் கையகப்படுத்தி வந்த அரசு, இனி நிலத்தின் அவசியத்தை நிரூபிப்பதுடன் வேறு வழியே இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இது தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக அரசை முடக்கும் செயல்என பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.