தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற உத்தரவிட மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரமில்லை! - அறங்காவலர் குழு முடிவின்படி வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம்

41 minutes before
நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற உத்தரவிட மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரமில்லை! - அறங்காவலர் குழு முடிவின்படி வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம்

நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற உத்தரவிட மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரமில்லை! - அறங்காவலர் குழு முடிவின்படி வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம்

மதுரை, நவ. 25 -உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்லில் கார்த்திகைத் தீபம் ஏற்ற முடியாமல் போனது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணாஉச்சநீதிமன்றத்தில் 17 பக்க நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், நில அளவைக் கல்லில் தீபம்ஏற்றுமாறு கோவில் அறங்காவலர் குழுவிடம் தெரிவித்தும், அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை என்றும், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றஅறங்காவலர் குழு முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அறங்காவலர் குழுவுக்கு உத்தரவிட மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், இதன் காரணமாகவே உச்சநீதிமன்ற உத்தரவின்படிஅங்கு தீபம் ஏற்ற முடியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ள ஆட்சியர், நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்காக உளமார மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு, ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

ஆலோசனைக் கூட்டங்கள்

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகளுடனும், 21-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி, உத்தரவின் அம்சங்கள் விளக்கப்பட்டன.கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்களுக்கு மிகாமல் கொண்ட குழுவினர் மூலம் தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நவம்பர் 24-ஆம் தேதி கோயில் நிர்வாகச் செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளருக்கும் மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் அனுப்பப்பட்டது.

5,797 காவலர்கள் பாதுகாப்பு

தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அமைப்பினர் திரள வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நவம்பர் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் 5,797 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.அன்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தீபம் ஏற்ற வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கால அவகாசத்தில் அவர்கள் வரவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு கோரிக்கை நிராகரிப்பு

அறிக்கையைத் தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், எதிர்தரப்பு இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.இதற்கிடையே, நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதனை ஏற்காத நீதிபதி அரவிந்த் குமார், அவமதிப்பு நடவடிக்கையைக் கோருவோர்அதற்குத் தனியாக மனுத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.

தீபத்தை சர்வே கல்லுக்கு மாற்றக் கோரி மனு

திருப்பரங்குன்றம் தீப மண்டபத்தில் ஏற்றப்பட்டுள்ள கார்த்திகைத் தீபத்தை, மலை உச்சியில் உள்ள நில அளவைக் கல்லுக்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக் கோரி, இந்துத்துவா அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வி.சி. சுக்லா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தீப மண்டபத்தில் எரிந்து கொண்டிருக்கும் அதே தீபத்திலிருந்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் அல்லது, 2026 நவம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படியே தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கோரப்

பட்டுள்ளது.

மேலும், தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது குறித்து தங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை என்றும், தங்களது ஆலோசனை பெறப்படவில்லை என்றும் கோவிலின் நான்கு ஸ்தானீகர்களும் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.