தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருடனுக்குத் தேள் கொட்டியதா?

14 Oct 2026, 9:06 pm
திருடனுக்குத் தேள் கொட்டியதா?

திருடனுக்குத் தேள் கொட்டியதா?

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் வரிசையாக வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தற்போது வெளியிட்டிருக்கும் ஆய்வு, ஓர்அதிர்ச்சிகரமான உண்மையை நம் முன் வைக்கிறது.

தில்லியின் வரைவு வாக்காளர் பட்டியலில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதம் வெறும்13.6 சதவீதம் மட்டுமே. ஆனால், தேர்தல் ஆணையத்தின் ‘ஈரோநெட்’ மென்பொருள் மூலம், சந்தேகத்திற்குரிய தவறுகள் இருப்பதாகக் கூறி முஸ்லிம்கள் மட்டுமே இலக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, மொத்தமாக அனுப்பப்பட்டநோட்டீஸ்களில் 20.3 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருக்கிறது. கணினித் திரையில் மின்னும்இந்த எண்கள் வெறும் எண்கள் அல்ல; அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வேட்டையாட வடிவமைக்கப்பட்ட இலக்குகள். “கணினிதான் செய்தது, எங்களுக்குத் தெரியாது” என அதிகாரிகள் தட்டிக் கழிக்கும் இந்த வாதம், தொழில்நுட்பக் கோளாறு அல்ல;திட்டமிட்ட மோசடியாகும்.

இது தில்லியோடு முடிவதல்ல; ‘தி வயர்’ ஊடகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளைக் கேட்டபோது, “அமைப்பே முடங்கிவிடும்” என்று சாக்குப்போக்குக் கூறியது. எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்று கேட்டால் “தரவு இல்லை” எனஒளிந்துகொண்டது. மகாராஷ்டிராவில் திடீரென 2.7 லட்சம் பேரின் வயதை 126 எனக் குறிப்பிட்டு வாக்காளர் எண்ணிக்கையைக் குறைத்துத் தேர்தல் ஆணையம் தன் நம்பகத்தன்மையைச் சுக்குநூறாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆவணங்களின்றி 16லட்சம் வாக்காளர்களைப் பின்வாசல் வழியாகச்சேர்த்ததும் அம்பலமாகியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தான் செய்த சட்டவிரோதமான படிவம் 6 மாற்றங்களுக்குஉச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றமோ, “எங்கள் பிரச்னையாக திணிக்க வேண்டாம்;புதிய படிவத்தை நாங்கள் அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ இல்லை” என்று தலையில் குட்டியிருக்கிறது.

ஜனநாயகத்தின் அறத்தைக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையமே தவறுகளுக்குக் கவசமாக மாற்றப்பட்டிருப்பது வெட்கக்கேடானது! முறைகேடு புரிந்த அதிகாரிகளை விசாரணைக்கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டிய ஒன்றிய அரசு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையின்படி கேள்வி கேட்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் நோக்கித் தன் காவல்துறையையும் துணை இராணுவத்தையும் ஏவிவிடுகிறது. போராடும் மாணவிகளைச் சங் பரிவார் குண்டர்களை வைத்துப் பாலியல் ரீதியாக தாக்குவதும், காவல்துறையின் ஒரு சாராரைக் கொண்டு கொடூரமாக அடித்து அச்சுறுத்துவதன் மூலமும் ஒன்றியமோடி அரசு தப்பித்துவிட முடியாது. இதிலிருந்தே ‘திருடனுக்குத் தேள் கொட்டியிருக்கிறது’ என்பதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.