எல்லமடைக்கு மீண்டும் பேருந்து சேவை துவக்கம்
1 hour before
<p><strong>எல்லமடைக்கு மீண்டும் பேருந்து சேவை துவக்கம்</strong></p><p>ஈரோடு, அக்.8-எல்லமடை பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்து சேவை, பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் புதனன்று மீண்டும் துவங்கியது.</p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பகுதியில் 200க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனா். இப்பகுதியை சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்காக வெளியூர் செல்லவும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவ வசதி பெறவும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து பொலவக்காளிபாளையம் அல்லது புதுக்கரைப்புதூர் சென்றுதான் பேருந்து சேவை பெற முடியும். எல்லமடை பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் மனு அளித்தனா். இதனடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொலவக்காளிபாளையம் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டி மாவட்ட நிா்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்தும், கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பேருந்து வசதியின்றி கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோபி, எல்லமடை, கூகலூர், கவுந்தபாடி வழியாக தினமும் நான்கு முறை இயக்கப்படும் பேருந்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதனன்று துவக்கி வைத்தார்.</p>
