தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பு: அமைச்சர் ராஜீவ் விளக்கம்

1 hour before
எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பு: அமைச்சர் ராஜீவ் விளக்கம்

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பு: அமைச்சர் ராஜீவ் விளக்கம்

சென்னை, ஆக. 21—எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மிதந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், பாமக கணேஷ்குமார் ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதே காரணம் என எடப்பாடி பழனிசாமியும் தங்கம் தென்னரசும் குற்றம் சாட்டி, அரசு தலையிட்டு மீனவர்களைக் காக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமைச்சர் ராஜீவ் பதிலளிக்கையில், பக்கிங்காம் கால்வாய் ரயில்வே மேம்பாலம், கொசஸ்தலை ஆறு சேரும் பகுதி, எண்ணூர் முகத்துவாரம், காட்டுபாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், நீரில் ஆக்ஸிஜன் அளவு லிட்டருக்கு 4 மி.கி. இருக்க வேண்டிய இடத்தில் 2 மி.கி. மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார். தொழிற்சாலைக் கழிவுகள் அல்ல, மனிதக் கழிவுகளே காரணம் எனவும், எண்ணூர், மணலியில் பாதாள சாக்கடைத் திட்டம் சரிவரச் செயல்படாததே இதற்குக் காரணம் எனவும் விளக்கினார்.

இறந்த 2,150 மீன்கள் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டதாகவும், மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜாய்ஸ் ரேச்சல் தலைமையிலான குழு 10 நாட்களில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும், தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.