தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிமீறும் ஆலைக்கு தடை கோரும் தீர்மானம்: அங்கீகரிக்க மறுப்பு

1 hour before
விதிமீறும் ஆலைக்கு தடை கோரும் தீர்மானம்: அங்கீகரிக்க மறுப்பு

விதிமீறும் ஆலைக்கு தடை கோரும் தீர்மானம்: அங்கீகரிக்க மறுப்பு

ஈரோடு, அக்.3– ஈரோடு அருகே விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் ஆலைக்கு தடை கோரும் தீர்மானத்தை கிராமசபை கூட்டத்தில் அங்கீகரிக்க அரசு அதிகாரிகள் மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வளரும் தலைமுறையினருக்கு மாசுற்ற நீர் உள்ளிட்ட இயற்கையை விட்டுச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் தொடர்ந்து பலகிராம சபை கூட்டங்களிலும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் முறையிட்டு வருகின்றனர். மனு கொடுங்கள் என்று எழுதி வாங்குவது, மினிட் புத்தகத்தில் எழுதுவது போன்ற போக்கு காட்டி வருகின்றனர். தீர்மானத்தை அங்கீகரிக்க மறுக்கின்றனர். ஒரு சில அரசு அலுவலர்கள் உறுதியாக இருந்தாலும்பலரும் விதிகளுக்கு மாறாக செயல்படும் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வெள்ளியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஈரோடு, கூரபாளையத்தில் செயல்பட்டு வரும் சன்ராஜா ஆயில்மில் எனும் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நிலத்தடி நீர், மண் மற்றும் காற்றை மாசுபடுத்திவருகிறது. இதனால் பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் ஆலையின்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருப்பதாக கூறிநீதிமன்றம் மூலம் மின் இணைப்பைதிரும்பப் பெற்று, ஆலையை மீண்டும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாசெயலாளர் என்.பாலசுப்பிரமணி, விஜயகுமார் உள்ளிட்டோர், ஆலையை விவசாய பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக் கோரித்தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆனால், ஊராட்சி செயலரும் தனி அலுவலரும் அதை அங்கீகரிக்கவில்லை. பொதுமக்கள் தொடர்ந்துவற்புறுத்தியதால், காவல்துறை மற்றும்மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை வரவழைத்து, ”தனியாக குழு அமைத்துப் பேசலாம்” எனக்கூறி கூட்டத்தை கலைத்து விட்டு சென்றனர். தொழில்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தும்நிலைமை மாறவில்லை என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கிராமசபையின் மக்கள் நலனை காற்றில் பறக்கவிடும் அதிகாரிகள் மீதுஅதிருப்தி அடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.