ஆக.17 இல் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ திட்டம் துவக்கம்: அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
1 hour before
<p><strong>ஆக.17 இல் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ திட்டம் துவக்கம்: அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்</strong></p><p>கோவை, ஆக.14-பொதுமக்கள் நேரில் வராமல், ஆன்லைன் மூலம் ஆவணப்பதிவு செய்யும் வகையில், ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ திட்டம் ஆக.17 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதென வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.</p><p>கோவையில் பதிவுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், புதிய முறையில் பத்திரப்பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் வராமல் ஆவணப் பதிவு செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் முறையில் ஆவணப் பதிவு செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு சேவை எளிதாக கிடைக்கும். மேலும், ஆவணங்கள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் வகையில்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். முதலமைச்சர் தொடங்கி வைப்பதன் மூலம் திட்டம் குறித்த தகவல்பொதுமக்களை எளிதில் சென்றடையும், என்றார்.</p>
