மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீட்டுச் சொத்தைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர்
5 hours before
<p>திருவல்லிக்கேணியில் தங்களுக்குச் சொந்தமான வீட்டை வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தானமாக வழங்கினார்.</p><p>திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ், டாக்டர் நடேசன் சாலையில் தங்களுக்குச் சொந்தமான வீட்டை, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத்திற்கு வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமிடம் தானமாக ஒப்படைத்தார்.</p><p>தங்களது குடும்பச் சொத்தை கட்சிப் பணிகளுக்காக வழங்கிய வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது இணையர் ஜி.ஜெயந்தி ஆகியோருக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில், முறைப்படி பத்திரப் பதிவு செய்து, சொத்து தொடர்பான ஆவணங்களையும் வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன் ஒப்படைத்தார். அவருக்கு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், மாவட்டக் குழு உறுப்பினர் ப.சுந்தரம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி பகுதிக் குழுச் செயலாளர் ஆர்.கபாலி, ஆட்டோ சங்க நிர்வாகி பிரபாகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருண்குமார், வழக்கறிஞர் டி.ஆர்.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
