விவசாயிகள் சங்க பாப்பாரப்பட்டி வட்ட மாநாடு
9 hours before

விவசாயிகள் சங்க பாப்பாரப்பட்டி வட்ட மாநாடு

தருமபுரி, ஆக.9-விவசாயிகள் சங்க பாப்பாரப்பட்டி வட்டக்குழு மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வட்ட 4 ஆவது மாநாடு, பாப்பாரப்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வட்டாரத் தலைவர் டி.ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை ஜெயராமன் ஏற்றி வைத்தார்.

மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன் துவக்கவுரையாற்றினார். வட்டாரச் செயலாளர் ஆர்.சக்திவேல் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பேரூராட்சி கவுன்சிலர் வே.விஸ்வநாதன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.சண்முகம், ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜாமணி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.சின்னராஜி, வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் மு.சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இக்கூட்டத்தில், பென்னாகரம் வட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். பிக்கிலி வருவாய் கிராமம் சக்கிலி நத்தம், தட்டப்பள்ளம் விவசாயிகளின் அனுபவ நிலங்களை பறிக்கும் வனத்துறையினர் முயற்சியை கைவிட வேண்டும். மலையூர் கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டாரத் தலைவராக பி.ஜெகநாதன், செயலாளராக டி.ஆர்.சின்னசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் எம்.குமார் நிறைவுரையாற்றினார். கே.காமராஜ் நன்றி கூறினார்.