தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல்

1 hour before
ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல்

ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல்

திருப்பூர், ஜூலை 31-ஐடிபிஎல் திட்டத்தில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாராபுரம் பிரதான சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பெண் விவசாயிகள் நால்வர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.பாரத் பெட்ரோலியம் நிறுவனம்சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் ஐடிபிஎல் திட்டத்தைசெயல்படுத்தி வருகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் முத்தூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை நெடுஞ்சாலை வழி

யாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர்தூரம் மட்டும் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல் துறை பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், திருப்பூர் தாராபுரம் சாலை வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவெள்ளியன்று, சாலை மறியலில்ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்துமுழக்கம் எழுப்பினர். அப்போது திடீரென 4 பெண் விவசாயிகள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடலில் மண்ணெண்ணெய்ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்துஅவர்கள் மீது தண்ணீரை ஊற்ற முயன்றனர். ஆவேசத்துடன் இதற்குஎதிர்ப்பு தெரிவித்து பெண்களும், விவசாயிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைகாவல் துறையினர் செய்தனர். காவல் துறையின் அடக்குமுறையை கண்டிப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, மாற்றுப் பாதையில் குழாய் பதிக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளைநிலங்களில் காவல் துறையினருடன் வந்து அளவீடு செய்யும் பணிகளை செய்ய முற்பட்டால் அதை தடுத்து நிறுத்துவோம். இப்பிரச்சனையில் தங்கள் போராட்டம்தொடரும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.