தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அச்சம் அகன்றது; கூட்டு மன உறுதி வென்றது - : ச.வீரமணி

28 Jul 2026, 10:10 pm
அச்சம் அகன்றது;  கூட்டு மன உறுதி வென்றது - : ச.வீரமணி

அச்சம் அகன்றது; கூட்டு மன உறுதி வென்றது - : ச.வீரமணி

வரலாற்றில் காலம் மிக வேக மாக நகரும் தருணங்கள் உண்டு. மக்களிடையே ஒருமித்த ஆவேசம் இல்லையே என்று தவித்த பல இந்தியர்களுக்கு இப்போது நிம்மதி கிடைத்திருக்கும். ஆட்சி அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் இறுதியில் நீதித்துறை ஆகியனவும் ஒரே திசையில் செயல்படுவது போன்ற சூழல் உருவானது, பிரிட்டிஷ் கால னித்துவ ஆட்சியின் மறுபதிப்பு போலவே தோன்றியது. சுதந்திரப் போராட்டம், தியாகங்கள் மற்றும் ஜனநாயக-மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் ஆகிய அனைத்தும் பெரும் நெருக்கடிக்குள்ளானதாகத் தெரிந்தன. ஜூலை 20 அன்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்டத்திற்கும் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில், அது நாடு வியக்கும் வகையிலான, திட்டமிடப்பட்ட மற்றும் தன்னிச்சையான மாணவர் போராட்டங்களின் சங்கமமாக மாறியது.

தேசிய கல்விக் கொள்கையும் மாணவர்களின் கொந்தளிப்பும்

நாம் முன்பே கணித்தபடி, இணையவெளியில் சிஜேபியின் அபரிமிதமான வளர்ச்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 2020 தேசிய கல்விக் கொள்கையிலிருந்து நேரடியாக உருவான மையப்படுத்தப்பட்ட தேர்வு மற்றும் சேர்க்கைக் கொள்கையானது, தேசிய தேர்வு முகமையின் (NTA) கீழ் தேர்வுகள் முறைகேடு செய்யப்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நமது முழு கல்வி அமைப்பையும் கார்ப்பரேட்டுகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றுவதற்கான ஒரு போர்வையே தேசிய கல்விக் கொள்கை என்பது இப்போது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பேரழிவை ஏற்படுத்திய மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வின் விளைவாக ஏற்பட்ட மன அதிர்ச்சியும், கல்வி கற்க விரும்பிய மாணவர்கள் மேற்கொண்ட கட்டாயத் தற்கொலைகளும் தேசத்தின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளன. இந்தத் தோல்விக்கான ஆதாரங்கள் மிகவும் வலுவாக இருந்ததால், கல்வி அமைச்சகமும் அரசாங்கமும் இறுதியாக மறுதேர்வு நடத்த ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும், தவறுகளுக்குப் பொறுப்பேற்பது என்பது ஆட்சியாளர்கள் மத்தியில் துளியளவும் இல்லை. தேசிய தேர்வு முகமையைக் கலைப்பதும், கல்வி அமைச்சர் பதவி விலகுவதும் மிகக் குறைந்தபட்ச நியாயமான கோரிக்கைகளாக இருந்தன. ஆனால், நரேந்திர மோடி அரசாங்கத்தின் வாயிலாகச் செயல்பட்ட ஆர்எஸ்எஸ்-கார்ப்பரேட்டுகள் கூட்டணி, அரசியல் மற்றும் நிர்வாகச் செயல்முறைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்ததுடன், பொறுப்புக்கூறலை மறுப்பதையே தங்கள் ஆட்சியின் கொள்கையாக நிலைநிறுத்தவும் முயன்றது. கேள்வி எழுப்பியவர்க ளையும் போராடியவர்களையும் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டது தான் எல்லாவற்றிற்கும் மேலான இறுதிக்கட்டத் தூண்டுதலாக அமைந்தது. ‘கரப்பான் பூச்சிகளின் கட்சி’ என்ற கருத்து காட்டுத்தீயெனப் பரவியது. இணையவெளியில் கிடைத்த ஆதரவு நிஜ உலகில் பிரதிபலிக்காது என்று நினைத்தவர்கள், இது பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்காக வெடித்துக் கிளம்ப வழிகளைத் தேடிக்கொண்டிருந்த ஒரு கூட்டு ஆத்திரத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினர். மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நாட்டின் இளைஞர்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு முட்டுச் சந்தில் தள்ளப்பட்டுள்ள நிலை பெரும் கொந்தளிப்பைத் திரட்டியது.

வேலையின்மையும் ஜனநாயக விரோதப் போக்கும்

சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் அரசு வேலைக்கான ஐம்பது முயற்சிகளில் தோல்வியடைந்த பி.டெக் தங்கப் பதக்கம் வென்ற ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளியானது. வேலையின்மைப் பிரச்சனையின் தீவிர மான தாக்கம் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதற்கான நம்பிக்கையைப் பறித்து வருகிறது. கல்வித் துறையிலும் நுழைவுத் தேர்வே மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய மோசடியாக அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் நீண்ட காலமாகவே இப்பிரச்சனைகள் குறித்துத் தங்களின் எதிர்ப்பு களைப் பதிவு செய்து வருகின்றன. புதிய அடக்குமுறைத் தொழிலாளர் சட்டங்கள், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் சிதைக்கப்படுவது மற்றும் விவசாயிகளின் நிச்சயமற்ற தன்மை ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மோடி அரசின் பிம்பத்தைக் கட்டமைக்கத் தீவிரமாகச் செயல்படும் ‘கோடி மீடியா’ ஊடகங்களின் அருவருக்கத்தக்க செயல்பாடுகள், இளைஞர்களின் இயலாமை உணர்வை மேலும் தீவிரப்படுத்தின. எனவேதான், தில்லியில் ஜூலை 20 அன்று அந்த இளைஞர்கள் அச்சத்தை முறியடித்தனர். அவர்களின் கூட்டு மன உறுதி வெளிப்படையாகத் தெரிந்தது. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை மறுத்து, அதற்குப் பதிலாகக் காட்டப்பட்ட வன்முறை என்பது நேதன்யாகுவின் செயல்பாட்டு முறையை அப்படியே ஒத்திருந்தது. தில்லியில் நடந்த இந்த நிகழ்வு தனித்து நின்ற ஒன்றல்ல. நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டும் ஒரு காரணியாக இது ஏற்கெனவே அமைந்துள்ளது. போராட்டக்காரர்களுடன் பேசுவதை ஒன்றிய அரசு பிடிவாதமாக மறுத்து வந்த நிலையில், இறுதியில் பேச்சுவார்த்தைக்கான ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தெருக்களின் ஆற்றலும் ஜனநாயகத்தின் வெற்றியும்

எனினும், காலப்போக்கில் பிரச்சனைகள் தானாகவே சரியாகிவிடும் என்று கருதி ஒன்றிய அரசு வழக்கமான செயல்பாட்டு முறையையே தொடர்ந்தால், அதனால் கற்பனை செய்ய முடியாத விளைவுகள் வெடிக்கும். சோனம் வாங்சுக் மேற்கொண்ட உன்னதமான முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், தற்போதைய சூழல் அவரைத் தாண்டி ஒரு கூட்டுப் பொறுப்புணர்வாக மாறியுள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

இறுதியாக, ஜனநாயகம் எவ்வளவு அச்சுறுத்தப்பட்டாலும் அது இறந்துவிடவில்லை. 1968 மே மாதம் பிரான்சில் நடந்த மாணவர் இயக்கத்தின் போது மாணவர்கள் தங்கள் மயக்க நிலையிலிருந்து வெளிவந்து, வியட்நாமின் கொடூரமான போரினால் கல்வி முறையில் ஏற்பட்ட இராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்தி வரலாறு படைத்தனர். தெருக்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. வரும் நாட்களில், இளைஞர்களின் தன்னிச்சையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் தங்களின் கோபத்திற்கு ஒரு திசையை வழங்க வேண்டும். ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவாக அங்கே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜூலை 26, 2026 / தமிழில் சுருக்கம் : ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.