தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிடல் காஸ்ட்ரோ 100 வரலாறு காணாத சவால்களுக்கு மத்தியில் எதிர்ப்பியக்கத்தின் உந்துசக்தி - ஆர். அருண்குமார்

12 Aug 2026, 9:17 pm
பிடல்  காஸ்ட்ரோ 100 வரலாறு காணாத சவால்களுக்கு மத்தியில் எதிர்ப்பியக்கத்தின் உந்துசக்தி - ஆர். அருண்குமார்

பிடல் காஸ்ட்ரோ 100 வரலாறு காணாத சவால்களுக்கு மத்தியில் எதிர்ப்பியக்கத்தின் உந்துசக்தி - ஆர். அருண்குமார்

ஆகஸ்ட் 13, 2026 அன்று, கியூபா தனது தலைமைத் தளபதி பிடல் காஸ்ட்ரோ ரூஸின் (Fidel CastroRuz) பிறந்த நூற்றா ண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக “தலைமைத் தளபதி பிடல் காஸ்ட்ரோ ரூஸின் நூற்றாண்டு” என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது அழியாதபாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்லாமல், அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வழிநடத்திய நாடு தற்போதுஎதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் வெளிப்படுத்துகிறது.

நூற்றாண்டு விழா: வாழும் பாரம்பரியம்

கியூபா முழுவதும் இந்த நூற்றாண்டு விழாமிகுந்த மரியாதையுடனும் உற்சாகத்துடனும் கடைப்பிடிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘கிரான்மா’ (Granma), இந்த வரலாற்றுத் தலைவரின் கொள்கைகளையும்லட்சியங்களையும் கௌரவிக்கும் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘பிடலுடன் 100 ஆண்டுகள்’ என்ற சிறப்புஇணையதளத்தைத் தொடங்கியுள்ளது. மத்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நினைவுகூரும் திட்டம்டிசம்பர் 2026 வரை நீடிக்கும். ஹவானாவில் ஆகஸ்ட் 10 முதல் 13 வரை “பிடல்: பாரம்பரியம் மற்றும் எதிர்காலம்”என்ற சர்வதேசக் கருத்தரங்கம் துவங்கியுள்ளது. இதில் வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும்சமூகத் தலைவர்கள் பங்கேற்று, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலும் மக்களின் இறையாண்மையிலும் பிடல் கருத்துக்களின் இன்றைய பொருத்தப்பாட்டைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.

தோழர் பிடலின் பாரம்பரியம் வெறும் நினைவோடு நின்றுவிடவில்லை; அது கியூபாவின் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஒரு வாழும் சக்தியாகவழிகாட்டுகிறது. மின்சாரம், எண்ணெய் போன்ற பல்வேறு வளங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் “உள்நாட்டு ஒழுங்கிற்கு சிறப்புகவனம் செலுத்துங்கள்”என்ற பிடலின் அறிவுறுத்தலை ஜனாதிபதி மிகுயெல் தியாஸ் கானல் வலுவாக கியூபமக்களிடம் முன்மொழிந்துள்ளார். மேலும், 2026-ல் கூட்டப்படும் கம்யூனிஸ்ட் கட்சி யின் 9-வது மாநாடு பிடலின்பாரம்பரிய வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படுகிறது. பிடலின் காலனித்துவ எதிர்ப்புச் சிந்தனையும், அவரதுஉறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடும் தொடர்ந்து ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்படுகின்றன.

பொருளாதாரப் போர் மற்றும் மக்களின் துயரம்

“ஒரு கொடூரமான முற்றுகை மற்றும் உண்மையான, தினசரி நிதித் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதையை” கியூபாஎதிர்கொண்டு வருவதாக தியாஸ் கானல் விவரித்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, வணிக மற்றும்நிதி முற்றுகை சமீப காலத்தில் மிகக்கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மிக மோசமான பேரழிவை உருவாக்கும் சமீபத்திய நடவடிக்கை எண்ணெய் தடை ஆகும். ஜனவரி 2026-ல், கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் நாடுகள் மீது அபராத வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியது. இதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் தடைகளுக்கு அஞ்சி கப்பல் நிறுவனங்கள் கியூபாவிற்கு எண்ணெய் கொண்டு செல்ல

மறுக்கின்றன. பல மாதங்களாக, ஒரு சொட்டு எரிபொருள் கூட நாட்டிற்குள் நுழையவில்லை. இது கடுமையான ஆற்றல் நெருக்கடியைத் தூண்டியுள்ளது. கியூபா கிட்டத்தட்ட 24 மாதங்களில் பன்னிரண்டு முறை நாடு தழுவிய மின் தடையைச்சந்தித்துள்ளது, இதில் ஏழு முறை 2026-ல் மட்டுமே நடந்துள்ளது. அரசு நாளிதழான கிரான்மா இந்த நிலைமையை ‘சிக்கலான மின்சார மற்றும் எரிசக்தி நெருக்கடி’ என்றுவர்ணித்துள்ளது.

கியூப மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாததால் 1,20,000-க்கும் மேற்பட்ட மக்கள் அறுவை சிகிச்சைக்காகக்காத்திருப்புபட்டியலில் உள்ளனர். இதில் 11,000-க்கும்மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர். அறுவைசிகிச்சை அறைகளில் மின்சாரம் போதுமானதாக இல்லை. இணைய இணைப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தைச் சார்ந்திருக்கும் கல்வித் தளங்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்கள் வறண்டு போனதால்போக்குவரத்து முடங்கியுள்ளது. ஒரு காலத்தில் பொருளாதாரத்தின் தூணாகஇருந்த சர்க்கரைத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் மக்கள் அடிப்படைதேவைகளுக்கான சர்க்கரையை அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த இன்னல்கள் அனைத்தும் அமெரிக்கா தொடுத்துள்ள பொருளாதாரப் போரின் நேரடி விளைவாகும். “67ஆண்டுகால முற்றுகையின் ஒட்டுமொத்த விளைவு இது” என்று தியாஸ் கானல் கூறியுள்ளார். 80% கியூப மக்கள் இந்தமுற்றுகையின் கீழேயே பிறந்து, தங்கள் வாழ்நாள் முழுவதையுமே இந்தச் சூழ்நிலையிலேயே கழித்துள்ளனர்.

ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான பரந்த தாக்குதல்

கியூபா மீதான தாக்குதல் என்பது ஒரு விரிவடைந்த ஏகாதிபத்திய தாக்குதலின் ஒரு பகுதியாகும். லத்தீன் அமெரிக்கா முழுவதும் நடக்கும் தேர்தல்களில் அமெரிக்கா பகிரங்கமாகத் தலையிட்டு, வலதுசாரி வேட்பாளர்களை ஆதரிப்பதோடு, அவர்கள் தோற்றால்உதவிகளை நிறுத்துவதாகவும் அச்சுறுத்துகிறது.

பொலிவியா ஒரு அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, ஏனெனில் அதன் தற்போதைய ஜனாதிபதி அமெரிக்க நலன்களுடன் இணைந்து,மக்களுக்குச் சாதகமான கொள்கைகளைத் தகர்த்து வருகிறார். ஜனவரி 2026-ல், அமெரிக்கா வெனிசுலா மீது‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) என்ற ராணுவத் தாக்குதலைத் தொடுத்து, அதன்ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது இணையரையும் கைது செய்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கியூபாவே முதன்மை இலக்காக உள்ளது. அமெரிக்கா எப்பொழுது வேண்டுமானாலும் தான் நினைத்தால் கியூபாவை ‘கிட்டத்தட்ட உடனடியாக’ தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். கியூபாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்காவின் கடற்படைப்போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) கரீபியன் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம்கியூப மக்களின் எதிர்ப்பை உள்ளிருந்தே உடைப்பதும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியின் மூலம் அச்சம் மற்றும் நிச்சயமற்ற சூழலை உருவாக்குவதும் ஆகும்.

எதிர்ப்பும் மீட்சியும்

எனினும் கியூபா நிமிர்ந்து நிற்கிறது. கியூப மக்கள் அமெரிக்கப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படவில்லை. அவர்கள்ஒற்றுமை மற்றும் படைப்பாற்றல் மூலம் இதனை எதிர்கொள்கின்றனர். சமையல் எரிவாயு பற்றாக்குறையைச்சமாளிக்க கியூப மக்கள் மிகவும் திறமையான விறகு அடுப்புகளை உருவாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இணைந்து பொதுவான சமையலறைகளை அமைத்து, சூரிய ஒளி மின்சாரத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். மருத்துவமனைகளில், மின்தூக்கிகள் மற்றும் மின்சாரம் இல்லாத நிலையில், நோயாளிகளை மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்கள் கைகள் மற்றும் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.அமெரிக்கா கியூபாவிற்கு மருத்துவ வென்டிலேட்டர்களை விற்க மறுத்தபோது, இளம் கியூபப் பொறியாளர்கள்நன்கொடையாகப் பெறப்பட்ட உபகரணங்களை வலுவூட்டி, சொந்தமாக வென்டிலேட்டர்களை உருவாக்கினர்.

கியூபா அதிக எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. மேலும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறைகளை உருவாக்கியுள்ளது. ஒரே ஆண்டில் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திப் பூங்காக்களை நிறுவி,புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை 3 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தியாஸ் கானல்முழங்கியபடி: “அவர்களால் சூரியனைத் தடுக்க முடியாது. அவர்களால் காற்றைத் தடுக்க முடியாது”.முற்றுகை இருந்தபோதிலும், கியூபாவிற்கு ரஷ்யா, சீனா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்துஉதவிகள் கிடைத்துள்ளன. ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் மூன்று மாதங்களுக்கு முன்பு மிகவும் தேவையான எரிபொருளை வழங்கியது. 79 வயதான புகழ்பெற்ற பாடகர் சில்வியோரோட்ரிக்ஸ், “அவர்கள் உள்ளே வந்தால், எனக்கு என் ஏகேஎம் நவீன துப்பாக்கியைக் கொடுங்கள்” என்றுமுழங்கியுள்ளார். தியாஸ் கானல், “புரட்சிக்காக நாங்கள் எங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று உறுதிபடக்கூறியுள்ளார்.

சீர்குலைக்க இயலாத உறுதி

தோழர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மிக ஆபத்தான ஒரு தருணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.அமெரிக்க முற்றுகை முன்னெப்போதையும் விடக் கொடூரமாக உள்ளது. பொய்ப் பிரச்சாரங்கள் இடைவிடாதுநடக்கின்றன. ஆனால் கியூப மக்கள் தங்கள் உண்மை நிலையை அறிவார்கள். அவர்கள் அதை ஒவ்வொரு நாளும்எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதை வெல்கிறார்கள்.

தியாஸ் கானல் கூறியது போல்: “நாங்கள் சரணடைய மாட்டோம்”. கியூபா அறுபத்தேழு ஆண்டுகால முற்றுகையைத் தாங்கி உறுதியாக நிலைநின்றுள்ளது. அது சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தி யுள்ளது. அதன் சமூகக் குறியீடுகள் இப்போதும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி மனித இனத்தின் மீது நம்பிக்கைகொண்டுள்ளது; சித்தாந்தம் அல்லது கொள்கைகளைக் கடந்து, பெரும்பாலான மக்கள் நல்லவர்கள் என்றநம்பிக்கையைக் கொண்டுள்ளது.

ஹவானாவின் மீது சூரியன் இன்னும் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கியூப மக்கள் இன்னும் தங்களைஒழுங்கமைத்து அணிதிரட்டிக்கொள்கின்றனர். மருத்துவர்கள் இன்னும் நோயாளிகளை ஏழு மாடிகள் வரை சுமந்துசெல்கிறார்கள். பொறியாளர்கள் இன்னும் பழுதுபார்க்க முடியாதவற்றையும் பழுதுபார்க்கிறார்கள். அண்டைவீட்டாரோ இன்னும் தங்கள் சூரிய சக்தியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு உத்தரவாலும் அதை மாற்ற முடியாது. எந்தவொரு டிஜிட்டல் பிரச்சாரத்தாலும் அதை உடைக்க முடியாது.எந்த முற்றுகையாலும் அதை அழிக்க முடியாது.பிடலின் நூற்றாண்டு விழாவில், லெனினின் வார்த்தைகள் உண்மையாக ஒலிக்கின்றன: “எங்களை மிரட்ட முயற்சிக்காதீர்கள் ஜென்டில்மேன்! உங்களால் முடியாது. நீங்கள் அதில் வெற்றி பெறமுடியாது.” கியூபா நிமிர்ந்து நிற்கிறது. கியூபா எதிர்க்கிறது. கியூபா உலகிற்குத் தொடர்ந்து ஒரு முன்மாதிரியாகஇருக்கும். இதுவே பிடலின் அழியாத பாரம்பரியம் - இது நிகழ்காலத்திற்கு சவால் விடுத்து, எதிர்காலத்தின்பாதைகளை ஒளிரச் செய்கிறது.

தமிழில் : அ.அன்வர் உசேன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.