முந்தய பக்கம்

உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து

3 hours before
உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து

உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து

நாமக்கல், ஆக. 3-குமாரபாளையத்தில் உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 30 லட்ச ரூபாய்மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையானது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர் தொழில்நுட்பஜவுளி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 20 க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் 30-க்கும் மேற்பட்டநூற்பாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜவுளி தொழில் பூங்காவில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஞாயிறன்று இரவு திடீரென கழிவுப்பஞ்சுகளை மேல் ஏற்றும் மின் மோட்டாரில் ஏற்பட்ட தீப்பொறியால்அங்கிருந்த பஞ்சு முட்டைகளில் தீ பற்றி எரிந்தது.

இதை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வெப்படை மற்றும் குமாரபாளையம் பகுதிகளை சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடைத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அனைத்து பஞ்சு மூட்டைகளும், இயந்திரங்களும் தீக்கிரையானது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம்ரூபாய் இருக்க கூடும் என தெரிகிறது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram