முந்தய பக்கம்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

yesterday
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் அவரிடம் பணியாற்றிய கணேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறையின் பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவிடம் பென்டிரைவ் ஒன்றை ஒப்படைத்ததாகவும், அதை ஆய்வு செய்தபோது, முதியவர் ஒருவர் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காட்சிகள் இருந்துள்ளது. விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பவர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி என காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து, சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ தொடர்பான டிஜிட்டல் தகவல்களில் அது 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருப்பதாகவும் கூறி, காவல்துறை முதலில் வழக்கில் “further action dropped” அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, விசாரணையைத் தொடர காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 29, 2026 அன்று வீரமணி, அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மகேந்திர சிம்ஹன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் வீரமணியிடம் பணியாற்றிய கணேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், எஃப்.ஐ.ஆரில் தனது பெயரை சேர்க்காமல் இருக்க வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக

ரயில்வே தொழிற்சங்க (SRMU) நிர்வாகியின் மகன் பிரகாஷ் என்பவருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram