காந்தியை படுகொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தான்: சாவர்க்கர் பேரன் நீதிமன்றத்தில் ஒப்புதல்!
2 hours before

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர உறுப்பினர்களாக இருந்தனர் என சாவர்க்கரின் பேரன் சத்யகி புனே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 மார்ச் 5 அன்று லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் விநாயக் சாவர்க்கர் குறித்து தெரிவித்த கருத்துகளை எதிர்த்து சத்யகி சாவர்க்கர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது இந்த தகவல் வெளியானது. சிறப்பு நீதிபதி அமோல் ஷிண்டே முன்னிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் டி. பவார் சத்யகி சாவர்க்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது, தனது தாய்வழித் தாத்தாவான கோபால் கோட்சே மற்றும் சாவர்க்கர் ஆகியோர் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தனர் என்பதையும் சத்யகி ஒப்புக்கொண்டார்.

“எனது தாத்தா கோபால் கோட்சேவும், நாதுராம் கோட்சேவும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலில் இருந்த உறுப்பினர்கள் என்று கூறுவது உண்மை” என அவர் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்தார்.

மேலும், நாதுராம் கோட்சே இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்ததாகவும், கோபால் கோட்சே மற்றும் விநாயக் சாவர்க்கர் ஆகியோரும் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் சத்யகி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் சிறைவாசத்திலிருந்து விடுதலையான பிறகு சாவர்க்கர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டதாகவும், 1937 முதல் 1943 வரை இந்து மகாசபையின் தலைவராக இருந்ததாகவும் அவர் கூறினார்.