தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோமுகி அணை வறண்டது: பருவமழையாவது கைகொடுக்குமா?

3 Sept 2026, 12:53 am
கோமுகி அணை வறண்டது: பருவமழையாவது கைகொடுக்குமா?

கோமுகி அணை வறண்டது: பருவமழையாவது கைகொடுக்குமா?

கள்ளக்குறிச்சி, செப்.2-கோமுகி அணையில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதால் கவலை அடைந்த கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வாழ்வாதாரம் விவசாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிரா

யபாளையம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் விவசாயமும், அதனைச் சார்ந்த தொழில்களுமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ் வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழில்களையே நம்பி உள்ளனர். இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகு படி செய்து வருகின்றனர்.

ஜீவாதாரம் கோமுகி அணை

இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக கல்வராயன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணை உள்ளது. கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் பெய்யும் மழைநீர் முழுவதும் கோமுகி அணையில் சேகரமாகிறது.

பழைய பாசனத் திட்டம்

அணையில் சேகரமாகும் நீரானது பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணைக்கட்டுகள் உள்ளன. இந்த அணைக்கட்டுகள் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று, 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

புதிய பாசனத் திட்டம்

மேலும், கோமுகி அணையின் புதிய பாசனத் திட்டத்தில், அணையி லிருந்து 8 ஆயிரத்து 917 மீட்டர் தூரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்தூர், மண்மலை, கரடிசித்தூர், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.

மூன்று போக நெல் சாகுபடி

கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்றுப் பாசன விவசாயிகள் சம்பா, ஆனிக்கார், மாசிக்கார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கிணறு இல்லாத விவசாயிகள் பலர், கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். ஆண்டு

தோறும் அக்டோபர் முதல் தேதியி லிருந்து பிப்ரவரி இறுதி வரை 5 மாதங்களுக்கு சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. புதிய பாசனக் கால்வாய் திட்டத்தில் ஒரு மெயின் கால்வாய் மற்றும் 3 கிளைக் கால்வாய்கள் மூலம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டும் பாதிப்பு

கடந்த ஆண்டு குறைந்த அளவே பருவமழை பெய்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. கோமுகி நிரம்ப தாமதம் ஏற்பட்டதால், சம்பா சாகுபடி பருவம் துவங்கி 1 மாதத்திற்குப் பின்பு, கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாததால், சம்பா பருவம் முடியும் முன்பே சம்பா சாகுபடிக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கோடை காலம் துவங்கிய நிலையில், கச்சி ராயபாளையம் மற்றும் கல்வராயன் மலையில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வற்றத் துவங்கியது. தொடர்ந்து நிலவிய வறட்சி காரண மாக, கோமுகி அணையில் சொட்டுத் தண்ணீர் இன்றி வற்றிய நிலையில் காணப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமுகி அணை இதுபோன்று தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. கல்வ

ராயன்மலை மற்றும் கச்சிராயபாளை யம் பகுதியில் கடந்த மாதங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்த நிலையிலும், கோமுகி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தொடர்ந்து கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதி யில் மழைப்பொழிவு இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் வெகு வாகக் குறைந்து வருகிறது. சம்பா சாகுபடி தண்ணீர் திறப்பதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், கோமுகி அணை வறண்ட நிலையில் காணப்படுகிறது.

இதே நிலை நீடித்தால், கச்சிராய

பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப் பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த

ஆண்டின் சம்பா சாகுபடி கேள்விக்குறி யாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், கச்சிராயபாளையம் பகுதி விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் வடகிழக்குப் பருவமழையை நம்பி காத்திருக்கின்றனர்.

- சசிகுமார்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.