நேட்டோவில் இருந்து கிரீஸ் விலக வேண்டும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி தினத்தில் கிரேக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
8 Aug 2026, 8:52 pm

நேட்டோவில் இருந்து கிரீஸ் விலக வேண்டும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி தினத்தில் கிரேக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

ஏதென்ஸ்,ஆக.8-ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசி லட்சக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தது. இதன்81 ஆவது ஆண்டு நினைவு தினம்ஆகஸ்ட் 6 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிரீஸ் நாட்டின் பல நகரங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. அமைதி அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் பங்கேற்று நடத்திய இந்த பேரணியில் அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு நினைவுகூறப்பட்டது. மேலும் தற்போது ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக ராணுவத்திற்கு செய்து வரும்அதிக செலவுகள் உள்ளிட்ட ராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் உருவாகப்போகும்போர் அபாயத்தை உணர்த்துகிறது எனவும், இதனால் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்குறித்தும்எச்சரிக்கப்பட்டது.

அணு ஆயுதங்களின் காரணமாக எதிர்காலத்தில் பேரழிகள் ஏற்படுவதற்கான ஆபத்து உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அணு ஆயுதங்கள் இல்லாத, போர்கள் இல்லாத, ஒரு மனிதனை மற்றொருமனிதன் சுரண்டாத உலகத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என சர்வதேச அமைதிக்கான கிரேக்கக் குழு வலியுறுத்தியுள்ளது.கிரீஸ் அரசு உட்பட ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் செலவுகளை குறைக்கிறோம் எனக்கூறி சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன. அதாவது மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு தேவையான எதிர்கால முதலீடுகள், நடைமுறை திட்டங்களுக்கு போதிய நிதிஒதுக்காமல், ஏற்கனவே ஒதுக்கிய நிதியையும் வெட்டி வருகின்றன. மறுபுறம் ராணுவத்திற்கு அதிக நிதிஒதுக்குகின்றன. தொழிலாளர் விரோத கொள்கைளை அமலாக்குகின்றன.

அதிக வெப்பத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மிகத்தீவிரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. கிரீஸிலும் பேரழிவு தரும்காட்டுத்தீ பரவியுள்ளது. அத்தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பல தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களுக்கு காரணம் வெறும் காட்டுத்தீ மட்டுமல்ல தொழிலாளர்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முதலீடு செய்யவில்லை. அதனை ஒரு செலவாகவும், தங்கள் லாபத்திற்குத் தடையாகவும் கருதும் முதலாளிகளால் நடத்தப்பட்ட மறைமுகப் போரினால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என பேரணியில் பங்கேற்ற அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.அமெரிக்கத் தலைமையில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட போர்களின் தாக்கம் இன்று வரை நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில் உலக நாடுகள் அணு ஆயுதங்களைவைத்திருப்பது குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பது எப்போது வேண்டுமானாலும் அந்நாடுகள் அவற்றைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு பேரழிவை உருவாக்கும் ஆபத்து உள்ளது.ஏனெனில் ஏகாதிபத்திய நாடுகள்தங்களது அணு ஆயுதக் கிடங்குகளை நவீனமயமாக்கி வருகின்றனர்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளை விட மிகக்குறைந்த நேரத்தில் 1,000 மடங்குஅதிகமான அழிவுகளை ஏற்படுத்தும்வகையிலான புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர். ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்று சர்வதேச அமைதிக்கான கிரேக்கக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.நேட்டோவில் இருந்து கிரீஸ்அரசு விலக வேண்டும் அமெரிக்கராணுவத்தலங்களை வெளியேற்ற வேண்டும் எனவும் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.