ஞானேஷ் குமார் நியமனமே ஜனநாயகத்தின் மீதான பேரிடி!
28 Sept 2026, 9:15 pm

ஞானேஷ் குமார் நியமனமே ஜனநாயகத்தின் மீதான பேரிடி!

இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் தூண்களில் ஒன்றாகும். நடுநிலையும் சுதந்திரமும் இதன் அடிப்படை அடையாளங்கள். ஆனால், அண்மைக் காலமாக தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப் பட்டு வருவதுடன், அதன் மாண்பும் சிதைக்கப்பட்டு வருகிறது. இதற்குச் சமீபத்திய மற்றும் மிக மோசமான உதாரணம், தலைமைத் தேர்தல்ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரமாகும். கேரளத்தில்பணியாற்றிய காலத்தில் அரசுக்குக் கோடிக்கணக்கில் நிதி இழப்பை ஏற்படுத்தியதும், தற்கொலை விவகாரத்தில் சிக்கியதுமான ஒரு நபர், நாட்டின் மிக உயரிய தன்னாட்சி அமைப்பின் தலைவராக எப்படிநியமிக்கப்பட்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் தாமஸ் ஐசக் எழுப்பியிருக்கும் கேள்விகள் சாதாரணமானவை அல்ல. 2006-ஆம் ஆண்டு கேரளப்பொதுப்பணித்துறைச் செயலாளராக ஞானேஷ்குமார் பணியாற்றியபோது, மலேசிய ஒப்பந்ததாரர் லீ பீன் சீன் தற்கொலை செய்துகொண்டதும், அந்தத் தற்கொலைக் குறிப்பில் அரசுஅதிகாரிகள் தமக்குத் தொல்லை கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்ததும் ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்வியின் உச்சமாகும். உலக வங்கி நிதி உதவியுடன்செயல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தில் நிலவிய தொய்வு காரணமாக, மாநில அரசுக்கு ரூ.250 கோடிவரை இழப்பும் நிதிச்சுமையும் ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்பு விசாரணையை எதிர்கொண்ட ஒரு அதிகாரி, ஒன்றியபாஜக அரசுக்குச் சேவை செய்ததன் பரிசாகவே இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சிகரத்தைஅடைந்துள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மேலும், ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமுன்வடிவைத் தயாரிப்பதிலும், ராமர் கோவில் அறக்கட்டளையை அமைப்பதிலும் இவர் ஆற்றிய செயல்களே இத்தகைய உயரிய நியமனத்திற்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம், ஆளும் கட்சியின் அரசியல் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நபர்களை இத்தகைய பதவிகளில் அமர்த்துவது அம்பலமாகியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட நடைமுறைகளில் வெளிப்படும் குளறுபடிகளும், தேர்தல் ஆணையம் தன்னாட்சியை இழந்து நிற்பதும் ஞானேஷ் குமாரின் இந்தச் சட்டவிரோத நியமனத்தையே உறுதிப்படுத்துகின்றன.

தனிநபரின் மீதான குற்றச்சாட்டுகளைத் தாண்டி, இது நாட்டின் தேர்தல் அமைப்பில்ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழமான அமைப்பு ரீதியான சீரழிவாகும். ஆளுங்கட்சியின் அரசியல்முகவராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஞானேஷ் குமார், தன் பதவியில் தொடர்வதற்கு எள்ளளவும் தகுதியற்றவர். அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்; அல்லது நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகப்பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்.