முந்தய பக்கம்

ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் போராட்டம்! - அபிஜீத் திப்கே அறிவிப்பு

yesterday
ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் போராட்டம்! - அபிஜீத் திப்கே அறிவிப்பு
<p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் நாடு முழுவதும் போராட்டம் என கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.</p><p>வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை தொடர்பான முடிவுகள்மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் நாடு முழுவதும் போராட்டம் என கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். இந்த காந்தி ஜெயந்தியன்று ஜனநாயகத்தைக் காக்க நாம் உறுதியேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram