முந்தய பக்கம்

தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 3 ஆண்டுகள் தடை!

yesterday
தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 3 ஆண்டுகள் தடை!
<p>காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுளானா, 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். தேர்தலின்போது, ரூ.30 லட்சம் என்ற வரம்பை மீறி அவர் செலவு செய்துள்ளதாக எழுந்த புகாருக்கு, அதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் இரு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் இது தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராகி விளக்கமளிக்கவில்லை.</p><p>இந்த நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அசன் மவுலானா போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram