தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்: ஓசூர் சிஐடியு சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

2 hours before
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்: ஓசூர் சிஐடியு சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்: ஓசூர் சிஐடியு சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி செப். 27-நிரந்தரமற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.சிஐடியு மாவட்ட தலைவர் பி.ஜி. மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் என்.ஸ்ரீதர் வரவேற்றார்.

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன்,மாநிலத் துணைத் தலைவர் கே. விஜயன், டிஆர்இயூ பொதுச் செயலாளர்பேபி சகிலா,சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், சிஐடியு கர்நாடக மாநில தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சு. வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், ‘‘ஒன்றிய, மாநிலஅரசுகள் தொழிலாளர் உரிமைகளை பறிக்க புதுப்புது திட்டங்களை தீட்டி வருகிறது.தில்லி, நொய்டா தொழில்நகரங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் பேசுகையில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர், நிரந்தரமற்ற தொழிலாளிகளாக, பல கான்ட்ராக்டர்கள் மூலம் ஒப்பந்த தொழிலாளிகளாக உள்ளனர். அட்டைப் பூச்சி போல் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டிவருகின்றனர். ஓசூர் தொழில்நகரம் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் நகரமாக மாறியுள்ளது. நிரந்தரமான வேலைகளில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எந்த உரிமைகளும்இல்லாமல் 12 மணி நேரம் 14 மணி நேரம்கொத்தடிமையாக வேலைசெய்கின்றனர். இதை முறியடித்து அவர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் வழங்குவதற்கு இந்த மாநாடு ஒரு துவக்கமாக இருக்கும்’’ என்றார்.

தீர்மானங்கள்

தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகள்,சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வீட்டு வாடகை படி, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, போனஸ்,8 மணிநேர வேலை, சுகாதார கழிப்பறை வசதிகள், ஓய்வறைகள், மகப்பேறு விடுப்பு, விசாகா கமிட்டி அமைத்தல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். நிரந்தரமற்ற அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்த வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பிஎஃப்,இஎஸ்ஐ, தொழிற்சாலையின் அடையாள அட்டை, ஊதிய பட்டியல், காப்பீடு உள்ளிட்ட சட்டபூர்சமூக பாதுகாப்பு வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வுகள்,சட்டப்படி உரிமைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ரூ.50,000 மாநில மாநாட்டு நிதியும், சிஐடியு சங்கம் நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.2000நிதியும் வழங்கப்பட்டது.மாவட்ட பொருளாளர் ஜி.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.