மேற்கு வங்கத்தில் ‘ஏகாதிபத்தியமும் ஜனநாயகமும்’ கருத்தரங்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, கியூபா தூதர் ஜுவான் கார்லோஸ் பங்கேற்பு
yesterday

மேற்கு வங்கத்தில் ‘ஏகாதிபத்தியமும் ஜனநாயகமும்’ கருத்தரங்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, கியூபா தூதர் ஜுவான் கார்லோஸ் பங்கேற்பு

கொல்கத்தாமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரமோத் தாஸ்குப்தா பவனில் ஞாயிறன்று ‘ஏகாதிபத்தியம் மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. சீத்தாராம் யெச்சூரி அறக்கட்டளை மற்றும் ஜோதி பாசு சமூக ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும்பொது அறிவுஜீவிகள் ஆகியோர் ஆர்வத்துடன் திரளாக பங்கேற்றனர்.

ஆய்வுக் கட்டுரைகள்

‘ஏகாதிபத்தியத்தின் புதிய யுகம்’ என்ற தலைப்பில் இளம் ஆய்வாளர்களின், ஆய்வுரைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 168 கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வுரைகளின் விரிவாக்கப்பட்ட பதிப்புகளை சீத்தாராம் யெச்சூரிஅறக்கட்டளைஒரு புத்தகமாக வெளியிட உள்ளது.

தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலம்

இதனைத் தொடர்ந்து, பிரதிநிதித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் மாணவ - இளைஞர் ஆர்வலர்களான அய்ஷே கோஷ்,தீப்சிதா தர் மற்றும் சகி ஆகியோர் பங்கேற்றனர். இந்த அமர்வைப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா சிஷ்டி நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ‘ஏகாதிபத்தியம்’ குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் தொடக்க உரையுடன் இக்கருத்தரங்கு தொடங்கியது. பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் சிறப்புரையாற்றினார். மேலும், இந்தியாவுக்கான கியூபத் தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகுலேரா, பொது அறிவுஜீவி மாலினி பட்டாச்சார்யா மற்றும் வரலாற்றாசிரியரும் நாவலாசிரியருமான முகுல் கேசவன் ஆகியோரும் கருத்தரங்கில் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். சீத்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் குறித்த புகைப்படம் மற்றும் ஒலி-ஒளிக் கண்காட்சியும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நாள் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டிருந்தது.