சுதந்திர தின விழா 2026 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தஒன்றிய அரசு
14 Aug 2026, 9:10 pm

சுதந்திர தின விழா 2026 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தஒன்றிய அரசு

2026ஆம் ஆண்டின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப்பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியதுறைகளைச் சேர்ந்த மொத்தமாக 1,057 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்களைஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், “வீரதீரச் செயல்களுக்கான 301 பதக்கம் வழங்கப்படுகிறது. இதில் 272 பதக்கங்கள் காவல்துறைப் பணியாளர்களுக்கும், 29 பதக்கங்கள் தீயணைப்புதுறைப் பணியாளர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளன. சிறப்புச் சேவைக்கானகுடியரசுத்தலைவர் பதக்கம் 92 பணியாளர் களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த சேவைக்கான பதக்கம் 664பேருக்கு வழங்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.