தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அக். 6-இல் தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பேரணி

yesterday
அக். 6-இல் தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பேரணி
<p>வாக்குத் திருட்டுக்கு எதிராக வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.</p><p>தில்லியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா கூட்டாணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் கட்சித் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் ஜெயராம் ரமேஷ் மற்றும் கே.சி. வேணுகோபால், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் எம்.ஏ.பேபி, சிபிஐ(எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபன்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம், வாக்குத் திருட்டு, அரசியலமைப்புக்கு விரோதமான எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p><p>இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சார்பில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, வாக்குத் திருட்டுக்கு எதிராக வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளதாகவும், அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் “ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி நடத்தும் என்றும் தெரிவித்தார்.</p><p>மேலும், வரும் நவம்பர் 1-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் தில்லியில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும்; உச்ச நீதிமன்றத்தில் உள்ள எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே &#39;இந்தியா&#39; கூட்டணி கட்சிகளின் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.