தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நம்பிக்கைக் கீற்று நம்மை அழைக்கிறது! - ச.வீரமணி

14 Aug 2026, 7:52 pm
நம்பிக்கைக் கீற்று நம்மை அழைக்கிறது! -  ச.வீரமணி

நம்பிக்கைக் கீற்று நம்மை அழைக்கிறது! - ச.வீரமணி

79 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் நம்பிக்கையின் வசந்த காலத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். அது ஒருமிகச் சிறந்த காலகட்டமாகத் திகழ்ந்தது. நள்ளிரவு வேளையில், நமது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கூட்டுமனநிலையை நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளிப்படுத்தினார்: “விதியுடனான நமது சந்திப்பைநிறைவேற்றுவதற்கான உறுதிமொழியை நாம் காப்பாற்ற வேண்டும்” என்று அவர் முழங்கினார்.

ஒரு புதிய தேசத்தை உருவாக்கவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிணைந்த, பரந்த மற்றும்பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை வடிவமைக்கவும் வேண்டியது நமது விதியாக அமைந்திருந்தது.காலனித்துவ ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுபட்டு, பிரிவினைவாத சக்திகளையும் தேசப் பிரிவினையின்துயரத்தையும் கடந்து, ஒற்றுமையுடன் நின்று ஒரு புதிய தேசத்தை உருவாக்க வேண்டிய நிலையில் நாம்இருந்தோம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகாரக் குவிப்பும்

நாம் மேற்கொண்டிருந்த மாபெரும் பணியைக் கண்டு உலகெங்கும் உள்ள மக்கள் வியந்து கொண்டிருந்தனர்.நமது மக்கள்தொகையின் அளவும், அவர்களின் பன்முகத்தன்மையும் மிகப்பெரிய சவால்களாக இருந்தன. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாகப் பணியாற்றிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓர் எளியதீர்வைக் கொண்டு வந்தனர். அது, அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது என்பதேயாகும். மதம், மொழி, சாதி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வு களால் பிணைக்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட மக்கள் அனைவரும்இந்தியாவின் சமமான மற்றும் பொதுவான குடிமக்களாக இருப்பார்கள் என்பதே அந்தத் தீர்வாகும். இன்று நாம்திரும்பிப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கையின் வசந்த காலத்துடன் ஒப்பிடுகையில், நம்மில்பெரும்பான்மையானோர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே கருதுகிறார்கள்.

உலகிலேயே மிக உயர்ந்த அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடாக இந்தியா மாறியிருப்பதைநாம் காண்கிறோம். அரசாங்கத்தின் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் உட்பட ஒரு சிலரே, வானளாவியவருமானம் மற்றும் செல்வக் குவிப்பை அனுபவிக்கின்றனர். அந்த ஒரு சதவீதத்தினர் நாட்டின் 40 சதவீத உடைமைகளைக் கொண்டுள்ளனர். மற்ற பாதி மக்கள், வாழ்வாதாரத்திற்கும் கீழான நிலையில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான வாய்ப்புகள் குறைந்து, அனாதைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடல் வலிமையுடன் இருந்தபோதிலும், அவர்கள் வேலையில்லாமல் அல்லது அற்ப ஊதியத்துடன் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பட்டதாரிகள், முனைவர்கள் என அனைத்துத்தரப்பினருமே கைக்கு எட்டாத வேலைவாய்ப்புக்காக வரிசையில்நிற்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழல் தீர்க்க முடியாத முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, நாட்டின் உள்கட்டமைப்புச் சிக்கல்களை மேலும்தீவிரப்படுத்தும். நமது அரசமைப்புச்சட்டத்தில் நாம் வளர்த்தெடுக்கவும் செம்மைப்படுத்தவும் தீர்மானித்தஜனநாயகக் கோட்பாட்டை, தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கமாட்டார்கள். அதிகாரத்தைக் கையில்வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் முன்னோடிகள், ஜனநாய கத்தையும் மக்களின் ஜனநாயகஉரிமைகளையும் எப்போதும் வெறுத்து வந்தவர்களேயாகும். இந்தியச் சமூகத்தின் இயல்பான பன்முகத்தன்மையைப்புறக்கணிக்கும் வகையிலும், அதிகாரத்தை மையப்படுத்தும் நோக்கத்துடனும், இந்தியாவை நூறு சிறியஅலகுகளாகப் பிரிக்க வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ் கோரி வந்தது. பெரும்பான்மை மக்களுக்குஇன்னல்களை விளைவிக்கும் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியபிறகு, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள மக்களைப் பிளவுபடுத்தும் உத்தி யையே அவர்கள்நம்பியிருக்கிறார்கள்.

வெளியுறவுக் கொள்கையின் வீழ்ச்சியும் அமெரிக்காவிடம் சரணாகதியும்

சுதந்திரம் பெற்ற காலத்தில், நமது இறையாண்மையை வலுப்படுத்த, காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச்சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் பாதையை நாம் வகுத்தோம். அந்த அணுகுமுறை மகத்தான வெற்றியை ஈட்டியது; வறுமை மற்றும் பின்தங்கிய நிலையால்அவதிப்பட்ட நாடுகளின் அபிலாஷைகளுக்குத் தலைமை தாங்கும் நிலையில் நாம் திகழ்ந்தோம். ஆனால் இன்று,ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு அந்த அணுகுமுறையைக் கைவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குஆதரவளிக்கும் பாதையில் மிகத் தீர்மானகரமான முறையில் நகர்ந்துள் ளது.

இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் ஒன்று இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதாகும். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை நட வடிக்கைகள் கடும் எதிர்ப்பைச்சந்தித்துள்ளன. எனினும், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப் போர் நடவடிக்கைகளால்நிலைமை மாறியுள்ளது. ஈரானின் இராணுவ எதிர்ப்பு மற்றும் இஸ்ரேலை மட்டுமல்லாமல் வளைகுடாப் பகுதி முழுவதிலும் உள்ள அமெரிக்கஇராணுவத் தளங்களைக் குறிவைத்து அது நடத்திய தாக்குதல்கள், அப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுத்துள்ளன.

இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், ஈரான் மற்றும் ரஷ்யாவி லிருந்து எரிபொருள் விநியோகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாகநடைபெறும் போக்குவரத்து என எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கத் தொடங்கியுள்ள இராணுவ மோதலைத்தீர்ப்பதில் அது ஒரு இராஜதந்திரப் பங்கை ஆற்றியிருக்க முடியும். ஆனால் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும்அடிபணிந்து நடப்பது நம்மை முழுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும்பான்மைவாதமும் நிறுவனங்களைக் கையாளுதலும்

ஆர்எஸ்எஸ், பெரும்பான்மைவா தத்தை ஒரு சித்தாந்தமாக எப்போதும் ஆதரித்து வந்ததுடன், சமூகப் பார்வையில் பிராமணியத்தையும் கடைப்பிடித்துவந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பலதரப்பட்ட அடையாளங்கள் இருந்தபோதிலும், அனைவரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்குவதேசுதந்திரப் போராட்டத்தின் முயற்சியாக இருந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ்-இன் அணுகுமுறை பிரிப்பதும் ஒதுக்குவதுமாகவே இருந்து வந்துள்ளது. பாஜகவின் தற்போதைய அரசியல் மேலாதிக்கத்தால், பழங்குடியினர், தலித்துகள்,முஸ்லிம்கள் மற்றும் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பெரும்பான்மைவாதக் கொள்கைகள், பலவந்தத்தின் மூலமான ஆதிக்கத்தைக் குறிக்கின்றன.அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள சுதந்திரமான நிறுவனங்களைக் கையாளுவதன் மூலம் இந்தஆதிக்கம் வெளிப்படுகிறது. இத்தகைய கையாளுதலின் மிகப்பெரிய களமாக இந்தியத் தேர்தல் ஆணையம்விளங்குகிறது. வாக்காளர் பட்டியல் கையாளுதல் மூலம், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தைத்தேர்ந்தெடுக்காத, மாறாக அரசாங்கமே மறைமுகமாகத் தங்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்குநிலைமை முன்னேறியுள்ளது.

இந்தச் சித்தாந்தக் கட்டமைப்பின் நவ-பாசிசப் பண்புகள் முழுமையாக வேரூன்றி, எங்கும் நிறைந்த அச்சச்சூழலை உருவாக்குவதன் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கார்ப்பரேட்டுகளின் பிரதான ஊடகங்கள்மூலமாகவும், சமூக ஊடகங்களில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பரப்பும் போலிச் செய்திகள்மூலமாகவும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் ஒடுக்கப்படுவதை நாம் காண்கிறோம்.எனினும், அச்சம் கரைந்துபோன சூழலில் வெளிப்படும் இந்த அபூர்வமான கூட்டு மன உறுதிக்கு முன்னால், அரசுஎன்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்பதாகத் தோன்றுகிறது. 79 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கனவு கண்ட அந்தச் சுதந்திரத்தை நனவாக்கும் வகையில், வரும் ஆண்டில் பலதரப்பட்ட முயற்சிகளும் மலர்ச்சியும்காணக் கிடைக்கும் என்று நம்புவோம். சவால்கள் மலைப்பானவைதான் என்றாலும், நம்பிக்கைக் கீற்று ஒன்றுநம்மை அழைக்கிறது.

(ஆகஸ்ட் 12, 2026) தமிழில் சுருக்கம்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.