முந்தய பக்கம்

காவி வண்ணத்திற்கு மாறிய உலகக்கோப்பை ஹாக்கி ஜெர்சி

30 Jul 2026, 9:48 pm
காவி வண்ணத்திற்கு மாறிய உலகக்கோப்பை ஹாக்கி ஜெர்சி
<p><strong>காவி வண்ணத்திற்கு மாறிய உலகக்கோப்பை ஹாக்கி ஜெர்சி</strong></p><p>புதுதில்லி ஆடவர், மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிகளின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு அணி எப்போதுமே நாட்டின் பாரம்பரிய நீல நிற உடையை (ஜெர்சி) அணிந்து விளையா டும். ஆனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் ஜெர்சி முழு காவி வண்ணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் ரஸ்குன்டா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஸ்குன்டா,”விளையாட்டு ஜெர்சியில் கூட காவி வண்ணம் சேர்த்திருப்பது வெட்கக் கேடானது” என கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் ஹாக்கி இந்தியா இதனை நியாயப் படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே கூறுகையில்,”சர்வதேச ஹாக்கி போட்டிகள் பெரும்பாலும் நீல நிற செயற்கைப் புல்வெளியில் நடைபெறுவதால் அங்கு நீல நிற ஜெர்சி அணிந்த வீரர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக மஞ்சள் மற்றும் காவி பரிந்துரைக்கப்பட்டன. தேசியக் கொடியின் ஒரு நிறமாகவும், தியாகம் மற்றும் தைரியத்தின் அடையாளமாகவும் விளங்கும் காவி நிறமே தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று அவர் கூறி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram