தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண் அசைவு மூலம் மொழி கற்கும் கைக்குழந்தைகள்: புதிய ஆய்வு

2 hours before
கண் அசைவு மூலம் மொழி கற்கும் கைக்குழந்தைகள்: புதிய ஆய்வு

சில மணி நேரங்களுக்குள் அழிந்த டைனோசர்கள்: புதிய ஆய்வு தகவல்

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தில் ஆறு மைல் அகலமுள்ள ‘சிக்ஸுலுப்’ (Chicxulub) விண்கல் மோதியபோது டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்தன. இந்த மோதலின் காரணமாக ஆவியக்கப்பட்ட பாறைகள் சிறு துகள்களாக மாறி மீண்டும் பூமியின் மீது மழையாகப் பொழிந்தன என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தாக்கம் கடுமையான வெப்ப அலைகளை உருவாக்கியதுடன், வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் தடிமனான உலகளாவிய தூசுப் போர்வையை ஏற்படுத்தி டைனோசர்களைச் சில மணி நேரங்களுக்குள்ளேயே கொன்று குவித்துள்ளது. இந்த ஆய்வு ‘JGR: Biogeosciences’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னுள் வெடித்துச் சிதறும் நிலையில் வீனஸ்

சூரியனுக்கு அருகில் உள்ள இரண்டாவது கோாளான வீனஸ் (வெள்ளிக்கிழமை) தன்னுள் பிளவுபட்டுத் தகர்ந்து கொண்டிருக்கக்கூடும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேம்பட்ட 3D உருவகப்படுத்துதல்களின்படி, இந்தக் கோளின் பிரம்மாண்டமான பிளவு பள்ளத்தாக்குகள் ஒப்பீட்டளவில் சமீபத்தில்தான் உருவாகியுள்ளன என்பதும், அவை இன்னும் விரிவடைந்து வருகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. முன்பு நம்பப்பட்டதை விட வீனஸின் உள்பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆய்வு ‘Nature Geoscience’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கண் அசைவு மூலம் மொழி கற்கும் கைக்குழந்தைகள்: புதிய ஆய்வு

கைக்குழந்தைகள் ஒருவருடன் கண் தொடர்பு (Eye contact) வைப்பதன் மூலமே கவனத்தைச் செலுத்தி மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று ‘Nature Communications’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. பேச்சாளரின் கண்கள் தெளிவாகத் தெரியும்போது மட்டுமே குழந்தைகளின் மூளை அலைகள் பேச்சாளரின் மூளை அலைகளுடன் ஒத்துப்போய் மொழி கற்கும் திறன் பெறுவதை விஞ்ஞானிகள் மூளை அலைகளைக் கண்காணித்து உறுதிப்படுத்தியுள்ளனர். கற்றல் செயல்பாட்டில் கண் தொடர்பு மிக முக்கியமானது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.