தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்ஸ்டாவில் ஆடை விளம்பரம் மூலம் மோசடி

10 hours before
இன்ஸ்டாவில் ஆடை விளம்பரம் மூலம் மோசடி

இன்ஸ்டாவில் ஆடை விளம்பரம் மூலம் மோசடி

சமூக வலைத்தளங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவையில் ஆன்லைன் ஆடை விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவன

பெண் ஊழியர் ஒருவர் ரூ. 41,000-ஐ இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் பணிபுரியும் சந்திரிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், இன்ஸ்டாகிராமில் ’கார்னிக் கிளாத்திங்’ (Karnic Clothing) என்ற பக்கத்தில் வந்த ஆடை விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 9 சுடிதார்களின் விலை வெறும் ரூ. 2,859.90 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் ஆடைகளை ஆர்டர் செய்தார். அடுத்த சில நாட்களில், அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில் ஆடைகள் கோவைக்கு வந்துவிட்டதாகவும், பணத்தை அனுப்பினால் உடனடியாக டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. அதை நம்பி அவர் QR குறியீட்டைப் பயன்படுத்தி ரூ. 2,860

அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய பிறகு, ”இது ஆடையின் விலை மட்டுமே; டெலிவரி கட்டணமாக மேலும் ரூ. 1,400 அனுப்ப வேண்டும்” எனக் கேட்டுள்ளனர். ஆடை வேண்டாம், பணத்தைத் திருப்பித் தருமாறு சந்திரிகா கேட்டபோது, ”ஆர்டரை ரத்து செய்ய முடியாது” எனக் கூறி வற்புறுத்தி ரூ. 1,400 பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, ”30 வினாடிகளுக்குள் பணத்தை அனுப்பினால் மட்டுமே சாப்ட்வேர் ஏற்கும், இல்லையென்றால் பணம் வேறு கணக்கிற்குச் சென்றுவிடும்” என்று கூறி, பணத்தை உடனடியாக திருப்பித் தருவதாக நம்பவைத்து ரூ. 9,999 வாங்கியுள்ளனர். மேலும், சந்தேகமடைந்த சந்திரிகாவை நம்பவைக்க போலி முகவரியிலான பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்றுகளை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். இதை உண்மை

யென நம்பிய அவர், சிறுகச் சிறுக மொத்தம் ரூ. 41,000 வரை இழந்துள்ளார்.

இறுதியில், கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரில் சென்று பார்த்தபோதே, அப்படி ஒரு கடையே இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் சைபர் க்ரைம் போலீஸாரிடமும், கூகுள் பே செயலியிலும் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறுகையில், யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்தால் பணம் தரப்படும் எனக் கூறும் ’டாஸ்க் மோசடி’, போதைப்பொருள் இருப்பதாக மிரட்டும் ’டிஜிட்டல் கைது மோசடி’, மின்சாரம் துண்டிக்கப்படும் எனக்கூறி கணக்கை காலி செய்யும் ’மின் கட்டண மோசடி’ என பல்வேறு வடிவங்களில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. கோவையில் மட்டும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 50 சைபர் க்ரைம் புகார்கள் வருகின்றன என்றார்.ஆன்லைன் நிதி மோசடிக்கு ஆளானால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணிற்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் 24 மணி நேரத்திற்குள் புகார் பதிவு செய்ய வேண்டும் என்றனர்.(நநி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.