தீக்கதிர் உலக செய்திகள்
17 hours before

தீக்கதிர் உலக செய்திகள்

ஆட்சி அமைப்பதில் இழுபறி:உடன்பாடின்றி முடிந்த பேச்சுவார்த்தை

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க எதிர்கட்சியான காடி ஐசன்கோட்டின் யாஷர் கட்சிக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அரபு கட்சிகளின் ஆதரவு இன்று யூத கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கமுயற்சி செய்து வருகிறார். குறிப்பாக இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சியின் ஆதரவு கோரி தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.

ரஷ்ய போர்க்கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்

லிபியா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பல் மீது கடல் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் திடீர் தாக்குதல் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏழு கடல் ட்ரோன்களைப் பயன்படுத்தி மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்த ரஷ்யக்கடற்படையின் நவீனப் போர்க்கப்பலைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யஅதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.