ஜனநாயக மறுப்பும் அதிகாரக் குவிப்பும்!
5 Aug 2026, 8:56 pm

ஜனநாயக மறுப்பும் அதிகாரக் குவிப்பும்!

ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை (சட்டப்பிரிவு 370) ஒன்றிய அரசு ரத்து செய்து 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. “ஒரே நாடு, ஒரே சட்டம்”என்ற பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த நோக்கத்திற்காக இம்முடிவு திணிக்கப்பட்டது.

ஆனால், நிலப்பரப்பை வரைபடத்தின் வழியே இணைப்பது மட்டுமே ‘தேசிய ஒருமைப்பாடு’ ஆகாது; மக்களின் இதயங்களை வெல்வதே உண்மையான ஒருமைப்பாடு. தன்னாட்சிஅதிகாரம் பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாகத்தரம் குறைக்கப்பட்டதன் மூலம் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமும், நிலம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டதாகவே காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர். அமைதி, வளர்ச்சி என்ற பெயரில் மக்களின்விருப்பத்தைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, அம்மாநில அரசியலில் பெரும்நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது.

2022-இல் நிறைவடைந்த தொகுதி மறுவரையறை மூலம், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு பகுதிக்கு விகிதாச்சாரத்திற்கு மீறிஇடங்கள் உயர்த்தப்பட்டன. இது பாரம்பரியமக்கள்தொகைச் சமநிலையை மாற்றி, பாஜகவின் தேர்தல் வாய்ப்பை வலுப்படுத்தவே செய்யப்பட்டது. சட்டமன்றம் அமைக்கப்பட்ட போதிலும்,அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. துணை நிலை ஆளுநரிடம் முதன்மை அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத் தத்துவத்திற்கே முரணானது.

தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்ததை மட்டுமே இயல்புநிலை திரும்புவதற்கான சான்றாக அரசு காட்டிவிட முடியாது. ஏனெனில், தேர்தல் பங்கேற்பு என்பது மாற்றத்திற்கானமக்களின் விருப்பமே தவிர, ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் அல்ல.

உபா உள்ளிட்ட கொடிய சட்டங்களின் கீழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைதுகளும், ஊடகக் கட்டுப்பாடுகளும் அச்சஉணர்வையே ஏற்படுத்துகின்றன. இன்றும் மக்கள்பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்படுவதும், அமைதியான போராட்டங்களுக்கு அனுமதியின்மையும் ஜனநாயகம் நசுக்கப்படுவதையே காட்டுகிறது.

உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எதேச்சதிகாரக் கட்டுப்பாடுகள் மூலம் நிர்வகிக்க முனைவது, அம்மாநில மக்களை இந்தியஒன்றியத்திடமிருந்து மேலும் அந்நியப்படுத்தவே வழிவகுக்கும். எல்லையோரப் பிராந்தியத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறுவது நாட்டின் அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பெரும் குந்தகத்தை விளைவிக்கும்.

எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்ற அரசுக்கு முழுநிர்வாக அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்து, மக்களுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும். மக்களின் குரல்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமே நீடித்த அமைதியையும், உண்மையான தேசிய ஒருமைப்பாட்டையும்உறுதி செய்ய முடியும்.