தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

30 Jul 2026, 10:09 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கம்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

டோக்கியோ,ஜூலை 30- ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கியூஷு தீவில் உள்ள குமமாகோ (Kumamoto) மாநிலத்தை தாக்கிய நிலநடுக்கத்தில் 62 பேர் காயமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்புப்பணிக்காக சுமார் 5,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வீசும் கடும் வெப்பம் பெரும் சவாலாக உள்ளது. மேலும், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் (aftershocks) மீட்புப் பணிகளுக்கு மேலும் சவாலை தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷிமா (Kashima) எனும் நகரில் வணிக கட்டடம் ஒன்று இடிந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக அது உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும், கட்டடத்தின் மற்றொரு பகுதியில் எரிவாயு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குமமாகோ பகுதியில் சுமார் 23,000 வீடுகளுக்கு மின்சாரமும், 75,000 வீடுகளுக்குக் குடிநீரும் கிடைக்கவில்லை. சுமார் 15,000 மக்கள் 400 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அன்னாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார். பல வீடுகள் தரைமட்டமானதாகவும், சில வீடுகள் ஆற்றிற்குள் சரிந்து விழுந்ததாகவும் கூறியுள்ளார். கியூஷு பகுதியில் உள்ள சில கார் மற்றும் செமிகண்டக்டர் (Semiconductors) உற்பத்தி ஆலைகள் தங்களது உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

நட்பு நாடுகளை மறைமுகமாக குற்றம்சாட்டும் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் 10 மாநிலங்களை குறிவைத்து ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். போதுமான வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதன் நட்பு நாடுகளை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற அவர் உக்ரைனிலேயே வான்பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு டிரம்ப்பிடம் அனுமதி கோரி இருந்த நிலையில் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்காக பலியாகும் அரிய புத்தகங்கள்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களு க்குப் பயிற்சி அளிக்க மனிதர்களின் உண்மையான அறிவு (எழுத்துகள்) தேவைப்படுவதால், பழைய புத்தகங்களை மொத்தமாக வாங்கி ஸ்கேன் செய்து விட்டு அவற்றை அழிக்கும் நடைமுறை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங் கள், தங்கள் அதிநவீன ஏஐ மாடல்க ளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக (Trai ning data) பழைய புத்தகங்களை மொத்தமாக வாங்கி வருகின்றன. பல அரிய மற்றும் மறுபதிப்பில் இல்லாத பழைய புத்தகங்கள் என அனைத்தும் பழைய புத்தகக்கடைகள் மூலமாக வாங்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டு அந்த அறிவு செயற்கை நுண்ணறி வுக்கு கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அப்புத்தகங்களை மீண்டும் சரியான முறையில் பைண்டிங் செய்து பாதுகாப்பதற்கு பதிலாக உட னடியாக அழிக்கப்படுகின்றன. இத்த கைய நடைமுறையின் காரணமாக எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பழைய புத்தகங்கள் இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பிரபல செயற்கை நுண்ணறிவு நிறு வனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic), தனது புகழ்பெற்ற ‘கிளாட்’ (Claude) AI மாடல்களை உருவாக்கும் போது, சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கிய லட்சக்கணக்கான புத்தகங்களை ஸ்கேன் செய்து விட்டு அழித்து விட்டதா கவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சர்வதேச தரப்படுத்தப்பட்ட புத்தக எண் தரவுத்தளம் (ISBNdb) உலகின் மிகப்பெரிய புத்தகத் தரவுத்தளமாக உள்ளது. இவர்கள் தான் தற்போது ஏஐ நிறுவனங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் திரட்டிக் கொடுக்கும் தொழிலை தீவிரமாகச் செய்து வரு கின்றனர். இணையதளங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி முறை களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் மனித எழுத்துகளின் தரத்திற்கு இணை யானதாக இல்லை. அதே நேரத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் முற்றிலும் மனி தர்களால் எழுதப்பட்டு, தரமான அசல் மனித அறிவோடு இருப்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு புத்தகங் கள் தங்கச் சுரங்கமாக உள்ளன. ஒருபுறம் மொத்த விற்பனை மூலம் புத்தக கடைகளுக்கு தேவையற்ற பழைய புத்தகங்களை விற்று லாபம் பார்க்க முடிந்தாலும், எந்தவித மதிப் பீடும் செய்யப்படாமல் அரிய மற்றும் மீண்டும் கொண்டுவர முடியாத பொக்கி ஷங்களான பழைய புத்தகங்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவது மன்னிக்க முடியாத இழப்பு என்கின்றனர் ஐரோப் பிய புத்தக வர்த்தகர்கள். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழைய புத்தக விற்பனையாளர்கள் சமீப காலமாக சந்தித்த அனுபவங்க ளைப் பகிர்ந்துள்ளனர். எவ்வித தொ டர்பும் இல்லாத, வெவ்வேறு தலைப்பு களில் சிறந்த மற்றும் நிபுணத்துவம் தொடர்பான புத்தகங்களைச் சிலர் மொத்தமாகக் கொள்முதல் செய்கிறார் கள். வாங்குபவர்கள் யாருக்காக வாங்குகிறார்கள் என்ற விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மேம்படுத்துகின்ற ஆய்வகங்களின் நேரடி அல்லது மறைமுக வேலைகளாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். பொதுவாக பழைய புத்தக்கடைகள் விற்பனை நிலையமாக மட்டும் இல்லா மல் மலிவு விலையில் அறிவை கடத்தும் இடமாக உள்ளன. அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்க முடியாத வர்கள் பழைய புத்தக்கடைகளில் தங்களுக்கு தேவையான புத்தகங்க ளைப் பெறுவார்கள். மறுபதிப்பு வராத அல்லது பதிப்பில் இல்லாத லட்சக்கணக்கான புத்தகங்கள் இத்த கைய பழைய புத்தகக்கடைகளில் மட்டும் தான் கிடைக்கும். அவை கார்ப்பரேட் நிறுவனங்களால் அழிக்கப்படும் போது புத்தகத்தின் தேவை உள்ள ஒருவரது உரிமை மறுக்கப்படுகிறது. அப்புத்த கங்களின் அறிவை செயற்கை நுண்ணறிவு நமக்கு வழங்கினாலும் மூலப்பிரதிகளில் இருந்து கிடைக்கும் அனுபவமும் உணர்வும் இந்த செயல்முறை காரணமாக துண்டிக் கப்படுகிறது என்ற கருத்துக்களும் எழுந் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.