ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஊடுருவல் ஜந்தர் மந்தருக்கு வராத ஆர்எஸ்எஸ் ராஞ்சியில் மட்டும் உணவு விநியோகம்
13 Aug 2026, 9:26 pm

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஊடுருவல் ஜந்தர் மந்தருக்கு வராத ஆர்எஸ்எஸ் ராஞ்சியில் மட்டும் உணவு விநியோகம்

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ்கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதாவது20 நாட்களாக (வியாழனன்றுடன்) போராடி வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவுடன் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வந்தாலும், இந்த போராட்டத்தைபயன்படுத்தி ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக - ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் மாணவர்களை போலகுண்டர்களை களமிறக்கியுள்ளது. கடந்த 2 வார காலமாக அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டக்களத்தில் புகுந்துள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் திங்களன்று சட்டமன்ற வளாகம் முன்பு வன்முறையை தூண்டிவிட்டு, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர். மேலும் போராடும் மாணவர்களுக்கு நாங்கள்தான் உணவுவழங்கி வருகிறோம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு சிறப்பு ஷூட்டிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ரவி சிங் இந்த உணவு பொறுப்பை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏமாற்றுஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான தில்லி அரசு மற்றும்ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை ஜந்தர் மந்தரில்மாணவர்கள் போராடிய போது தண்ணீர் விநியோகம், உணவு கொண்டு வர தடை விதித்தது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஸ்விக்கிமற்றும் ஜொமாட்டோ மூலம் போராடும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கினர். அப்போதுஆர்எஸ்எஸ் - பாஜக மாணவர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது. ஆனால் தற்போது பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலமான ஜார்க்கண்டில் மட்டும் அதிகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் கும்பல் உணவு விநியோகம் செய்வது கண்டனங்களை கிளப்பியுள்ளன.