தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவது உண்மையான வெற்றி அல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்

14 hours before
உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவது  உண்மையான வெற்றி அல்ல  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்

உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவது உண்மையான வெற்றி அல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சுசென்னை, செப். 15-டிவிஎம் சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 29ஆம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநிறுவனர் எம்.இருளப்பன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் சிறந்தமருத்துவர், பள்ளி முதல்வர், சமூக சேவகர்உள்ளிட்ட பலருக்கும், நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்கல்லால் கட்டப்பட்ட கோயில்களில் காணிக்கை செலுத்துவதற்கு முன்பு, நடமாடும் கோயில்களாக விளங்கும்நலிவடைந்தவர்களுக்கு ஈதல் வேண்டும் என்பதை திருமூலர் விளக்கமாக கூறியுள்ளார்.

அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவது தான் உண்மையான வெற்றி என போற்றுகிறோம்.ஆனால் வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் மூலம் பெறப்படும் மன நிறைவு தான்வாழ்க்கையில் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதைகுழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்திபோதிக்க வேண்டும்.இன்றைய தலைமுறையினர் அனைவரும் அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர்.

ஒரு நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இருக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆன்மா ஒன்று கிடையாது. செயற்கை நுண்ணறிவு மூலம் சேவைகளை செய்ய இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. எனவே சமூக சேவை ஆற்றுபவர்கள் தான்மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்று கூறினார்.

இதில் செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவர் டி.வடிவேல் முகுந்தன், கொத்தாரிபெட்ரோ நிறுவன இயக்குநர் எம்.ராஜவேல்,டிரைவே லாஜிஸ்டிக் குழும தலைவர் என்.ரவிசங்கர், மருத்துவர்கள் பி.நெல்லையப்பர், திருவருள், பாலம் எஸ்.பெஞ்சமின்இ.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.