தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை!

12 hours before
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை!

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை!

கோவை, செப். 19- நீதிபதிகள் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது என்று சென்னை உயர் நீதிமன்றநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார்.கோவை, குனியமுத்தூரில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 9ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசுகையில், வழக்கறிஞர் தொழில் என்பது வணிக நோக்கம் கொண்டதல்ல; அது சேவை சார்ந்த உன்னதமான பணியாகும். அரசியல் கட்சிகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் நிலைப்பாடு எடுப்பது நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கறிஞர்களின் முதன்மை விசுவாசம் அரசியலமைப்புக்கும், நீதிக்கும் மட்டுமே இருக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல சட்டக் கல்லூரிகளில் 30 முதல் 50 சதவீதம் வரை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழல் கவலையளிக்கிறது. மேலும், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சட்ட துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு ஏற்ப இளம் வழக்கறிஞர்கள் நடைமுறை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் சட்டத்தை முழுமையாக அறியாமல் தகவல்கள் பகிரப்படுவது, நீதித்துறை மீதான பொதுமக்களின் புரிதலைப் பாதிக்கின்றது.

நீதித்துறையை தற்போதைய நெருக்கடியில் இருந்து பாதுகாக்க, சட்டக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பொறுப்பில் உடனடி சீர்திருத்தங்கள் தேவை. அகில இந்திய பார் தேர்வை தரமான பகுப்பாய்வு மற்றும் நடைமுறை அறிவை மதிப்பிடும் தேர்வாக மாற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். கொலீஜியம் அமைப்பில் நீதிபதிகள் தேர்வுக்கான தெளிவான தகுதி அளவுகோல்களும், வெளிப்படையான நடைமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் தங்கள் அரசியல் அடையாளங்களை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டு, நீதிமன்றத்தினுள் அரசியலமைப்பு மற்றும் நீதியின்பக்கம் மட்டுமே நிற்க வேண்டும்.

மேலும் அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதாடும் இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித்துறையின் கண்ணியத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடியும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.