தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாவட்ட ஆட்சியரை தனியாக அழைத்துப் பேசிய விவகாரம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க வேண்டும்!

17 minutes before
மாவட்ட ஆட்சியரை தனியாக அழைத்துப் பேசிய விவகாரம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க வேண்டும்!

மாவட்ட ஆட்சியரை தனியாக அழைத்துப் பேசிய விவகாரம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க வேண்டும்!

மதுரை, நவ. 25 -திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனியாக தனது அறைக்கு அழைத்துப் பேசியது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன்வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான பிறகு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மாவட்ட ஆட்சியரைத் தனியாகத் தனது அறைக்கு அழைத்துப் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்போது, நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீதிபதியின் அறையில் ஆட்சியர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியரைத் தனியாக அழைத்துப் பேசியது குறித்து நீதிபதியின் உத்தரவில்குறிப்பிடப்படவில்லை.

எனவே, இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இதுதொடர்பாக அறிக்கை பெற்று விசாரணை நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்துவிசாரிக்க வேண்டும்.இவ்வாறு வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.