பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை மூடல்
3 Sept 2026, 12:52 am
<p><strong>பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை மூடல்</strong></p><p>பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாக, கடந்த 2015-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை திறக்கப்பட்டது. இந்நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களின் அறை முறையாக பராமரிக்காததால், தற்போது இந்த அறை மூடியே கிடக்கிறது. எனவே, தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாலூட்டும் அறையை மீண்டும் திறந்து அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
