முந்தய பக்கம்

விபத்தில் பெற்றோரை இழந்த 6 மாணவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

1 hour before
விபத்தில் பெற்றோரை இழந்த  6 மாணவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

விபத்தில் பெற்றோரை இழந்த 6 மாணவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி, அக்.1-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்தின் காரணமாக இறப்பு அல்லது நிரந்தர முடக்கம் அடைந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா செவ்வாயன்று (செப்.29) வழங்கி னார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் விபத்தின் காரணமாக இறப்பு அல்லது நிரந்தர முடக்கம் அடையும் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு மின்விசை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் 6 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram