முந்தய பக்கம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட நெரிசல்

16 hours before
மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட நெரிசல்

மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட நெரிசல்

கள்ளக்குறிச்சி, நவ.23-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை (நவ.23) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் மனுக்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், முட்டி மோதிக் கொண்டும் மனுதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மனுக்களை விரைவாக பதிவு செய்ய கூடுதல் கவுன்டர்கள் அமைக்க வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram