தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: 12 துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு பரிந்துரை!

6 hours before
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: 12 துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு பரிந்துரை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 12 துறை அதிகாரிகளின் அலட்சியமே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலக்கப்பட்ட விஷச்சாராயம் அருந்தியதால் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விரிவாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

தனது முழுமையான விசாரணையை முடித்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம், இறுதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கியச் சிறப்பம்சங்கள்:

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய்த்துறை ஆகிய 12 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கடுமையான அலட்சியமும், கடமை தவறிய போக்குமே இந்த சோகமான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம்.

கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது குறித்து ஆரம்பத்திலேயே தகவல் தெரிந்திருந்தும், காவல்துறையும் வருவாய்த்துறையும் எவ்வித முன்னெச்சரிக்கை அல்லது தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கடமை தவறிய 12 துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.