சேதமடைந்த கால்வாய் சரிசெய்யுமா நிர்வாகம்?
6 hours before

சேதமடைந்த கால்வாய் சரிசெய்யுமா நிர்வாகம்?

கள்ளக்குறிச்சி,செப்.11-கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராய பாளை யம் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நுழைவு வாயில் கேட் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் கடு மையாக சேதமடைந்து காணப்படுகிறது.

கால்வாயின் மேல் மூடி உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலை யில், பள்ளம் போல் காட்சி யளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, உடைந்த கால்வாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாக மும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.