தமிழக மக்களுக்கு எதிராக பாஜக போராட்டம்
yesterday
<p><strong>தமிழக மக்களுக்கு எதிராக பாஜக போராட்டம்</strong></p><p>காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணராஜசாகர் அணை முன்பாக கர்நாடகபாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நடுவர் மன்றம் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்கும் படிஉத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. எனினும் இந்த உத்தரவைத் தொடர்ந்து பிரிவினை அரசியல் செய்யக்கூடிய அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தநிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே கர்நாடக பாஜகவும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.</p>
