தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

30 Jul 2026, 9:51 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

தீக்கதிர் விரைவு செய்திகள்

காவிரி விவகாரம் ஆக. 2 அன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா வில் வரும் ஞாயி றன்று (ஆக. 2) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறி வித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் கர்நா டகா அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை யை, காவிரி நதிநீர் ஆணையம் நிராக ரித்துள்ளது. இந்த 2 சம்பவங்களை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சிஜேபி எச்சரிக்கையை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு

மாணவர்கள் - இளை ஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடி யாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, எதிர்காலப் போராட்டங்களின் போது போ ராட்டக்காரர்கள் இரும்புத் தடுப்புகளை அகற்றிச் செல்வதைத் தடுக்கும் வகையில், ஜந்தர் மந்தர் களத்தில் உள்ள தடுப்புகள் அனைத்தும் வெல்டிங் மூலம் ஒன்றுடன் ஒன்று பலமாக இணைக்கப் பட்டுள்ளன.

மக்களவையில் வந்தே மாதரம் சட்ட மசோதா நிறைவேற்றம்

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் வந்தே மாதரம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதம் நடைபெறாமல், மசோதா நிறைவேற்றப்பட இருந்ததால், திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்திருந்தனர். வந்தே மாதரம் பாடா விட்டால் தேசத் துரோகிகளா என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி யிருந்தார்.

எனினும், மக்களவையிலும் தேசி யப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை “அவமதிப்பதை” தண்டனைக்குரிய குற்ற மாக்க வகை செய்யும் மசோதா நிறை வேற்றப்பட்டது.மாநிலங்களவையில் புத னன்று பரிசீலனை மற்றும் நிறைவேற் றத்துக்காகப் பட்டியலிடப்பட்ட ‘தேசிய கவுரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா 2026’-ஐ விவா தத்துக்கு அனுமதிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.