தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பதைத் தவிர்க்க மீனவர்கள் வலியுறுத்தல்

13 hours before
காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகள்  கரைப்பதைத் தவிர்க்க மீனவர்கள் வலியுறுத்தல்

காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பதைத் தவிர்க்க மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை, செப். 15-வடசென்னை காசிமேடு, எண்ணூர்கடற்பகுதிகளில் அதிகளவில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பைத் தடுக்கமாற்று ஏற்பாடுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடுமீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.லோகநாதன், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்அனுப்பியுள்ளார். அதில், பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்பகுதிகளில் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக விநாயகர் சிலைகளைக் கரைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளதால், சென்னையின்பெரும்பாலான சிலைகள் காசிமேடு பகுதிக்கு திருப்பிவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே தொழிற்சாலை மற்றும் நகர்ப்புறக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை கடற்பகுதியில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும்ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை அதிகளவில் கரைப்பது கடல் நீரையும், கடல்வாழ் உயிரினங்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிலைகளின் மரச்சட்டம், மூங்கில், இரும்புக் கம்பிகள் ஆகியவைபடகுகளையும் மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதுடன், மீன் வளத்தையும் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.இதற்கு மாற்றாக, மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் செயற்கைக் குளங்கள் அமைத்து, ரசாயனமற்றசிலைகளை அங்கு கரைக்க வேண்டும். கடலில் சிலைகள்கரைக்கப்பட்டால், 24 மணி நேரத்துக்குள் அவற்றின் கழிவுகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும். காசிமேடு, எண்ணூர் கடற்பகுதியை குப்பைத் தொட்டியாக மாற்றாமல், கடலையும் மீனவர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.