தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் உலக செய்திகள்

23 Jul 2026, 10:02 pm
​​​​​​​தீக்கதிர்  உலக செய்திகள்

கென்யாவில் சுரங்க விபத்து 5 தொழிலாளர்கள் பலி

கென்யாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான மழையின் காரணமாக சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில், பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் போதிய சக்தி வாய்ந்த புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சுரங்க உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கச்சா எண்ணெய் மீண்டும் விலை உயர்வு

போர்ப் பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு 95 டாலரைக் கடந்தது. இது கடந்த ஆறு வாரங்களில் இல்லாத உயர்வாகும். அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய்யும் விலை உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை மட்டுமின்றி பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்து பாதையிலும் தற்போது பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடந்து அதிகரித்து வருகிறது.

நேதன்யாகுவை கைது செய்ய மம்தானி வலியுறுத்தல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என நியூயார்க் மேயர் மம்தானி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நேதன்யாகு நியூயார்க் நகரத்தில் ஐ.நா அவை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் அங்கு வரும் போது கைது செய்யும் அதிகாரம் நியூயார்க் நகரின் அதிகாரத்தில் உள்ளதா என ஆய்வு செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். தற்போது நியூயார்க் நகர அதிகாரத்தின் மூலம் அவரை கைது செய்ய முடியாது. அதே அமெரிக்க அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.