தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக பாணியில் கேரள முதலமைச்சர் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அவலம் : 20 பதிவுகளை நீக்கிய மெட்டா

13 Aug 2026, 9:35 pm
பாஜக பாணியில் கேரள முதலமைச்சர் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அவலம் : 20 பதிவுகளை நீக்கிய மெட்டா

பாஜக பாணியில் கேரள முதலமைச்சர் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அவலம் : 20 பதிவுகளை நீக்கிய மெட்டா

திருவனந்தபுரம்கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக வி.டி.சதீசன் உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல கேரள முதலமைச்சர்வி.டி.சதீசனும் தன்னை விமர்சிக்கும் சமூக வலைதளப்பதிவுகள் மற்றும் ஊடகங்களை மிரட்டும் வேலையைதொடங்கியுள்ளார். இதன் முதல்படியாக வி.டி.சதீசனை விமர்சித்து சமூக வலைதளங்களில் வெளியான சுமார் 20செய்திப்பதிவுகளை முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய்நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனம் நீக்கியுள்ளது.

கைரளி மற்றும் ரிப்போர்ட்டர் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் உண்மையான மற்றும் ஆதார தகவல்களின்அடிப்படையில் அரசுக்கு எதிரான மற்றும் முதலமைச்சர் வி.டி.சதீசனை விமர்சித்து செய்திகளை வெளியிட்டன.இந்தச் செய்திப் பதிவுகள், காணொளிகளை சமூகவலைதளப் பக்கங்களிலிருந்து மெட்டா நீக்கியுள்ளது.

கடும் கண்டனம் அரசின் உத்தரவின்பேரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கைரளி மற்றும் ரிப்போர்ட்டர் தொலைக்காட்சிகள்குற்றம் சாட்டியுள்ளன. சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்று அரசின் விமர்சனங்களை தன்னிச்சையாகவோ அல்லது அழுத்தங்களின் காரணமாகவோ நீக்குவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கேரள எதிர்க்கட்சிகளும், ஊடகத்துறையினரும்கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.