முந்தய பக்கம்

எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ் அரசு

yesterday
எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ் அரசு

எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ் அரசு

நீட் முறைகேடுகளுக்கு எதிராக கேரளா முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 5000 பேர் மீது காங்கிரஸ் அரசு குற்ற வழக்கு பதிவுசெய்திருந்தது. நாட்டிலேயே அதிக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாநிலமாககாங்கிரஸ் ஆளும் கேரளா தான் இருந்தது.இந்நிலையில் தில்லியில் நீட் போராட்டத்திற்கு ஆதரவு தரும் காங்கிரஸ் தாங்கள் ஆட்சி செய்யும் கேரளாவில் போராடும் மாணவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்கிறது என கடும் எதிர்ப்புகள் எழுந்தன.இது காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு என கேரள எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அக்கட்சியின் தலைவர் ராகுல் இந்த விசயத்தில் முறையாகதலையிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர்கள் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற கேரளா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் வி.டி. சதீசன் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கை களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram