கேரளா வித்யாலயா பள்ளியில் காப்பீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
6 Aug 2026, 12:29 am

கேரளா வித்யாலயா பள்ளியில் காப்பீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை, ஆக. 5-மெட்ராஸ் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் அமீர் ஹைதர் கான் சிங்காரவேலர் கல்வி உதவி அறக்கட்டளைஇணைந்து கேரளா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செவ்வாயன்று (ஆக.4) காப்பீடு மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீசுதங்கம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் இன்சூரன்ஸ்இன்ஸ்டிடியூட்டின் கௌரவ செயலாளர் ஜி.ஆனந்த் வரவேற்றார். தனிநபர் சுகாதாரம், தொற்று நோய்கள் தடுப்பு,சத்தான உணவுப் பழக்கங்கள், முதலுதவி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து சிம்ஸ் மருத்துவமனைகுழந்தைகள் நல மருத்துவர் வித்யா மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். இன்ஸ்டிடியூட் நிர்வாகக்குழுஉறுப்பினர்கள் காப்பீட்டின் அவசியத்தை மாணவர்களுக்கு எளிமையாக எடுத்து ரைக்கும் வகையில்விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். சங்கீதா வீணா, அனந்தி, மகேந்திரன், தேவிகா ஆகி யோரின் நடிப்புமாணவர்களின் பாராட்டைப் பெற்றது. 25 நிமிடங்கள் நடை பெற்ற இந்த நாடகத்தை மாணவர்கள் உற்சாகமாககைதட்டி வரவேற்றனர்.

“ஜெனரேசன் Z மற்றும் ஜெனரேசன் ஆல்பா” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர் தமிழ் மாணவர்களுக்குஊக்கமளிக்கும் உரையாற்றினார். பெரிய இலக்குகளை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் முன்னேறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாசன் ஐ கேர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும், அமீர் ஹைதர் கான் சிங்காரவேலர் கல்வி உதவி அறக்கட்டளை சார்பில்60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகப்பைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.