கோட்டாவில் கோர விபத்துநின்றிருந்த லாரி மீது ஜீப் மோதி 9 பேர் பலி
22 Nov 2026, 9:10 pm

கோட்டாவில் கோர விபத்துநின்றிருந்த லாரி மீது ஜீப் மோதி 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள உதய்பூர் நெடுஞ்சாலையின் சம்புரா கிராமத்திற்கு அருகே ஞாயிறன்று அதிகாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அதிவேகத்தில் வந்த ஜீப் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது.சிகார் மாவட்டத்தில் உள்ள ஷியாம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மகாராஷ்டிராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஜீப், லாரி மீது மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் கோட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கோட்டா கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.